நமது சொந்த முயற்சிகளால் மட்டுமே நமக்கு விமோசனம்! யாருடைய கருணையாலும் தயவாலும் அல்ல!!அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே tjtnptf அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.
Download
அரசு பள்ளிகளின் மேம்பாடு நம் ஒவ்வொருவர் கையிலும் உள்ளது !!!... முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாய் உள்ள ஊழல் நடவடிக்கைக்கு எதிராய் அணிதிரள்வோம்...!!! ஒன்றாம் வகுப்பு முதல் உயர்கல்வி வரை கல்வியை அரசே இலவசமாக வழங்கிடுக!!!... ஓய்வுதியம் கருணையல்ல... ஆசிரியர்களின் உரிமை... .!!!
நமது கோரிக்கைகளின் நிறைவேற்றம் நாம் அரசுக்கு கொடுக்கும் அழுத்தத்தை பொறுத்தது...!!! ஊழலையும் இலஞ்சத்தையும் அரசியலாக நினைப்பவர்களைப் புறக்கணிப்போம்!!!... நியாயமான தியாகமான மக்களுக்கான அரசியல் எது என்பதைத் தீர்மானிப்போம்...!!!

27/8/16

SPD PROCEEDINGS-நாள்:26/8/16-ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு தேர்வு நிலை ஊதியம் அளித்தல் சார்பு

DEE PROCEEDINGS- Date:24/8/16- RBSK Medical Scheme-Nodal officer for Students-Teacher details Called


DEE:பொது மாறுதல் மூலம் மாறுதல் மற்றும் பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்களுக்கு முன் ஊதியச்சான்று வழங்குதல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.

தொடக்கக்கல்வி செயல்முறைகள்- நாள்:24/8/16-ஆரம்ப மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் தமிழ்,ஆங்கிலம்,கணக்கு, அறிவியல்,மற்றும் சமுகவியல் பாடங்களில் உயர்கல்வி தகுதி பெற்றால் மட்டுமே ,ஊக்க ஊதியம் மற்றும் பதவி உயர்வு வழங்கப்படும்


26/8/16

பான் கார்டில் உள்ள பத்து எழுத்துகள் எதைப் பிரதிபலிக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா?

பான் கார்டில் உள்ள பத்து எழுத்துகள் எதைப் பிரதிபலிக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா?நிரந்தர கணக்கு அட்டை எனப்படும் பான் கார்டு (Permanent Account Number) நம்மில் பலரிடமும் உள்ளது. இதில் கொடுக்கப் பட்ட பத்து எண்கள் பற்றிய சில விளக்கங்கள் இதோ...

பான் கார்ட் என்பது 10 இலக்க எழுத்து-எண் கொண்ட அட்டை. இதை வழங்குவது வருமான வரித்துறை.

இதன் முதல் 3 எழுத்துக்கள் வரிசை எண்களாகும்.

4வது எழுத்து தனிப்பட்ட நபரின் கார்டா அல்லது ஒரு தொழில் நிறுவனத்தின் கார்டா என்பதை குறிக்கிறது. “P” என்றால் அது தனிப்பட்ட நபருடையது. “F” என்றால் Firm, “C” என்றால் Company, “T” என்றால் டிரஸ்ட் (அறக்கட்டளையுடையது) என்று பொருள்.

5வது எழுத்து பான் அட்டை வைத்திருப்பவரின் கடைசி பெயரின் முதல் எழுத்தாகும்.

அடுத்து வரும் எண்கள் வரிசை எண்களாகும். இது 0001ல் ஆரம்பித்து 9999 வரை செல்லும். கடைசி எழுத்தும் வரிசை எண் தொடர்புடையது தான்.

உங்கள் செல்போன் ஒரிஜினலா, டூப்ளிகேட்டா..? - அதிர்ச்சியோடு தெரிந்து கொள்ளுங்கள்...

உங்கள் செல்போன் ஒரிஜினலா, டூப்ளிகேட்டா..? - அதிர்ச்சியோடு தெரிந்து கொள்ளுங்கள்...


நீங்கள் அதிகம் விலை கொடுத்து வாங்கிப் பயன்படுத்தும் செல்போன்கள் அனைத்தும் ஒரிஜினல் தானா என்பதை சோதித்துப் பார்ப்பது தற்போது கட்டாயமாகும்.

சில ஆயிரம் ரூபாய் முதல் பல ஆயிரம் ரூபாய்வரை கொடுத்து ஒரு புதிய மாடல் செல்போனை வாங்கும் போது, அதனுடைய உண்மைத்தன்மையை அறிய வேண்டு
ம் அல்லவா?...

உண்மையான நிறுவனத் தயாரிப்பாக இருக்க வேண்டும் இல்லையா? உண்மையான நிறுவனத்தைப் போன்றே தற்போது போலியான தயாரிப்புகள் தற்போது விலைக்கு வந்து அசல் எது? போலி எது? என்று கண்டுபிடிக்க முடியாதவாறு எந்த வித்தியாசமும் இல்லாமல் காணப்படும்.

இவ்வாறான போலி தயாரிப்பு மொபைல்களைக் கண்டறிய கீழ்க்கண்ட வழிமுறைகள் உங்களுக்கு உதவும்.

முதலில் நீங்கள் உங்கள் மொபைல் போன் ஒரிஜினல்தானா என்பதைக் கண்டறிய International Mobile Equipment Identification எனப்படும் IMEI எண்ணை அறிந்துகொள்ள வேண்டும்

உங்கள் மொபைலில் IMEI எண்ணைக் கண்டுபிடிப்பது எப்படி?.

சாதாரண செயல்பாட்டின் மூலம் IMEI எண்ணைக் கண்டறிய முடியும்.

உங்கள் மொபைலில் *#06# என தட்டச்சிடுங்கள்…உடனே உங்கள் மொபைல் போனிற்கான IMEI எண் காட்டபடும். அந்த IMEI எண்ணை குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.
அந்த IMEI ண்ணை ஒரு SMS ஆக தட்டச்சிட்டு 53235 என்ற எண்ணிற்கு SMS செய்துவிடுங்கள்.
இப்பொழுது உங்கள் பதில் SMS ஆக Success என்ற செய்தி வந்திருக்கும். அப்படி வரவில்லை யென்றால் உங்கள் மொபைல் போலியானது என்பதை நீங்கள் அறிந்துகொள்ளலாம்.

இந்த முறையில் உங்களுக்கு ஏதேனும் சந்தே கம் இருப்பின் இணை யத்தின் மூலமும் நீங்கள் உறுதிப் படுத்திக் கொள்ள முடியும்.

www.numberingplans.com என்ற இந்த இணைய முகவரிக்கு சென்று நீங்கள் குறித்து வைத்துக் கொ ண்ட IMEI எண்ணை உள்ளிடுவதன் மூலம் உங்கள் மொபைல் போனைப் பற்றிய கூடுதல் தகவல்களையும் நீங்கள் பெற முடியும்.

குறிப்பு: IMEI எண்ணானது பதினைந்து இலக்க எண்ணாக இருக்கும். உங்களுடைய மொபைல் தயாரிப்புக்குரிய நாடுகளையும், தரத்தையும் இந்த IMEI எண்களை வைத்துக் கண்டறிய முடியும்.

அதாவது நீங்கள் குறித்துவைத்த IMEI எண்ணில் 7, 8 வது இலக்க எண்கள்
1. 0,2 அல்லது 2,0 என இருப்பின் ஐக்கிய அரபு எமிரேட்சில் அசெம்பிள் செய்யப்பட்டதாக இருக்கும். இதனுடைய தரம்குறைந்ததாக இருக்கும்.
2. 0,8 அல்லது 8,0 என இருபின் ஜெர்மனி நாட்டு தயாரிப்பாகவும், தரமானதாகவும் இருக்கும்.
3. 0,1 அல்லது 1,0 என இருப்பின் அது பின்லாந்து நாட்டுத் தயாரிப்பாகவும் தரமிக்கதாகவும் இருக்கும்.
4. 1,3 என இருப்பின் Azerbaijan நாட்டு அசெம்பிள் தயாரிப்பாகவும், தரம் குறைந்தும், உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடியதாகவும் இருக்கும்.

'சிறுபான்மை பள்ளிகளுக்கு TET கிடையாது' - வழக்கு முழு விபரம்

'தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை மட்டுமே, ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என்ற உத்தரவு, சிறுபான்மைபள்ளிகளுக்கு பொருந்தாது' என, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு
உதவி பெறும்சிறுபான்மை பள்ளிகளில், அனுமதிக்கப்பட்ட இடங்களுக்கு, ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.
இந்த நியமனங்களுக்கு, அரசின் ஒப்புதல் கோரி, சிறுபான்மை பள்ளி நிர்வாகங்கள் விண்ணப்பித்தன. ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றிபெறாததால், அந்த விண்ணப்பங்களை, அரசுநிராகரித்தது. ஆசிரியர்கள் நியமனங்களுக்கு ஒப்புதல் அளிக்கவும், அரசு உத்தரவை ரத்துசெய்யவும் கோரி, உயர் நீதிமன்றத்தில்மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
தமிழ்நாடுகத்தோலிக்க கல்வி சங்கத்தின் செயலர், அருளப்பன் தாக்கல் செய்த மனுவில்கூறியிருப்பதாவது:
பள்ளி கல்வித்துறை, 2011 நவம்பரில் பிறப்பித்த உத்தரவில், 'ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றிபெற்றவர்களை மட்டுமே, பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களாகநியமிக்க வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது. கட்டாயகல்வி உரிமை சட்டத்தின் அடிப்படையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சிறுபான்மை பள்ளிகளைப்பொறுத்தவரை, இந்த சட்டம் பொருந்தாதுஎன, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே, பள்ளி கல்வித் துறையின்உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஆசிரியர்கள் சிலரது நியமனங்களுக்கு, தற்காலிகஒப்புதல் வழங்கி, சம்பளம் வழங்கும்படி, பள்ளி கல்வித் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதை எதிர்த்து, அரசு தரப்பில் மேல்முறையீடுசெய்யப்பட்டது. வழக்கை, நீதிபதிகள் ஜி.ரமேஷ், எம்.வி.முரளிதரன் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' விசாரித்தது. சிறுபான்மை பள்ளிகள் மற்றும் ஆசிரியர்கள் சார்பில், மூத்த வழக்கறிஞர்கள் சேவியர் அருள்ராஜ், அஜ்மல்கான், வழக்கறிஞர்கள் அருள்மேரி, காட்சன் சாமிநாதன் உள்ளிட்டோர்ஆஜராகினர்.
டிவிஷன்பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு தரமான ஆசிரியர்களைநியமிக்க வேண்டும் என்ற அரசின் கொள்கைமுடிவில், குற்றம் காண முடியாது. தரமான கல்வியை குழந்தைகளுக்கு வழங்கவேண்டும் என்பதற்காகவே, இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அரசாணைவருவதற்கு முன், அரசு உதவிபெறும், உதவி பெறாத சிறுபான்மைபள்ளிகளில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், ஐந்து ஆண்டுகளுக்குள், ஆசிரியர்தகுதித் தேர்வில் வெற்றி பெற வேண்டும்என, நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், பல ஆண்டுகள்பணியாற்றி வரும் ஆசிரியர்கள், ஐந்துஆண்டுகளுக்குள் தகுதித் தேர்வில் வெற்றிபெற முடியவில்லை என்றால், அவர்கள் பணியில் நீடிக்கமுடியாமல் போய் விடும்.
2012, 2013ம்ஆண்டுகளில் நடத்தப்பட்ட தகுதித் தேர்வில், தேர்ச்சிசதவீதம் மிகவும் குறைவு. பட்டதாரிஆசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்களாக, ஆசிரியர் பயிற்சி வகுப்பு, டிப்ளமோபடிப்பு முடித்தவர்களை மட்டுமே நியமிக்க முடியும். தகுதியானவர்கள் என தெரிந்த பின்தான், ஆசிரியர்களாக நியமிக்கப்படுகின்றனர். நியமித்த பின், தேர்வு எழுதி, தகுதி பெற வேண்டும் எனஎதிர்பார்க்க முடியாது.
எனவே, அரசாணை பிறப்பித்த தேதியில்இருந்து, தகுதித் தேர்வை அமல்படுத்தலாமாஎன்பதை, தேசிய ஆசிரியர் கல்விக்குழுவிடம், தமிழக அரசு விளக்கம்பெற வேண்டும். அரசாணைக்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு, புத்தாக்க பயிற்சி வகுப்புகளை நடத்த, சிறுபான்மை பள்ளிகள் பரிசீலிக்கலாம். கட்டாய கல்வி உரிமைசட்டத்தில் வகுக்கப்பட்ட விதிகளை பின்பற்றும்படி, சிறுபான்மைகல்வி நிறுவனங்களை, அரசு கட்டாயப்படுத்த முடியாது. அதனால், 2011 நவம்பரில், பள்ளி கல்வித் துறைபிறப்பித்த உத்தரவு, சிறுபான்மை பள்ளிகளுக்கு பொருந்தாது.

தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு, தள்ளுபடி செய்யப்படுகிறது. இரண்டு மாதங்களில், ஆசிரியர்களுக்கானசம்பளத்தை அரசு வழங்க வேண்டும். இவ்வாறு டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.

ரெயிலில் 92 பைசா இன்சூரன்ஸ் பிரிமீயர் திட்டம் வரும் 31-ந்தேதியில் இருந்து அறிமுகமாகிறது.

ரெயிலில்பயணம் செய்து கொண்டிருக்கும்போது திடீரெனவிபத்து ஏற்பட்டால், அவர்களுக்கு ரெயில்வே நிர்வாகம் இழப்பீடு வழங்கும். இது ஒவ்வொரு விபத்தைபொறுத்து இழப்பீடு மாறுபடும்.
இதனால்ரெயில்வே துறைக்கு இழப்பு ஏற்படுகிறது. இதை
சரிகட்டுவதற்காக பயணிகளுக்கான இன்சூரன்ஸ் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று ரெயில்வேபட்ஜெட்டின்போது மத்திய மந்திரி சுரேஷ்பிரபு அறித்திருந்தார்.

இந்த திட்டம் வரும் 31-ந்தேதியில்இருந்து அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.

இதன்படி, ரெயில்வே துறையின் அதிகாரப்பூர்வ ஆன்லைன் இணையத்தளமான IRCTC-ல்டிக்கெட் பதிவு செய்யும்போது ஒவ்வொருநபர்களுக்கு 92 காசுகள் இன்சூரன்ஸ் பிரிமீயமாகபிடித்தம் செய்யப்படும். இந்த பிரிமீயர் புறநகர்ரெயில் பயணம் செய்யும் பயணிகளுக்கும்அடங்கும்.
ஆனால், ஐந்து வயதிற்குட்பட்டோருக்கும், வெளிநாட்டு பயணிகளுக்கும் அடங்காது. உறுதி செய்யப்பட்ட டிக்கெட், ஆர்.ஏ.சி. மற்றும்காத்திருப்போர் பட்டியலில் இருப்போரும் இந்த வசதியை பெறலாம்.
இந்த பிரிமீயம்படி தற்செயலான ரெயில் விபத்திற்குள்ளாகி, உயிரிழக்கநேரிட்டால் 10 லட்சம் ரூபாய் இழப்பிடாகவழங்கப்படும். உடலின் பாகங்கள் செயலிழ்ந்தால்7.5 லட்சம் ரூபாயும், சிறிய காயம் ஏற்பட்டுமருத்துவமனையில் சேர்க்கப்பட்டால் 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.
அதேபோல்துப்பாக்கி சூடு, தீவிரவாத தாக்குதல்போன்ற சம்பவத்தால் உயிரிழந்தவர்களின் உடல்களை சொந்த ஊருக்குஎடுத்துச் செல்ல 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

ஐசிசிஐலம்பா்டு ஜெனரல் இன்சூரன்ஸ், ராயல்சுந்தரம் ஜெனரல் இன்சூரன்ஸ் மற்றும்ஸ்ரீராம் ஜெனரல் இன்சூரன்ஸ் ஆகிவற்றிளுடன்இணைந்து IRCTC இந்த திட்டத்தை செய்யஇருக்கிறது.

கூடுதல் ஆசிரியர்களை வடமாவட்டங்களுக்கு மாற்ற முடிவு ,ஆசிரியர்கள் பதற்றம் !

ஆசிரியர்கள்இடமாறுதல் கவுன்சிலிங், முடிவு கட்டத்தை எட்டியுள்ளது. வரும், 27ம் தேதி கட்டாயஇடமாற்றம் நடக்கிறது; இதில், ஆசிரியர்கள், பல்வேறுமாவட்டங்களுக்கு அதிரடியாக மாற்றப்பட உள்ளனர். அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆண்டுக்கு ஒருமுறை விருப்ப இடமாறுதல்கவுன்சிலிங் நடக்கிறது. கடந்த, 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, இந்தஆண்டு கவுன்சிலிங்கில், முக்கிய காலியிடங்கள்
மறைக்கப்படாமல், ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். வரும், 27 முதல், 29ம் தேதி வரை, அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், பணி நிரவல் எனப்படும், கட்டாயஇடமாற்றம் செய்யப்படுகிறது.

அதிக அளவில்... : ஒவ்வொரு பள்ளியிலும், மாணவர்கள்எண்ணிக்கைக்கு ஏற்ப, இத்தனை ஆசிரியர்கள்இருக்க வேண்டும் என்ற விகிதாச்சாரம் உள்ளது. அதையும் மீறி, சில மாவட்டங்களில், அதிகளவில் ஆசிரியர்கள் பணியில் உள்ளனர். அவர்களைகணக்கெடுத்து, ஆசிரியர் பற்றாக்குறை உள்ள மாவட்ட பள்ளிகளுக்குமாற்றுவதே, பணி நிரவல் கலந்தாய்வுஎன, கூறப்படுகிறது.
அதன்படி, பள்ளிக் கல்வித்துறை எடுத்துள்ள பட்டியலில், 3,000 ஆசிரியர்கள் வரை, சில மாவட்டங்களில், கூடுதலாக பணியாற்றுவது தெரியவந்துள்ளது. எனவே, கூடுதல் ஆசிரியர்இடங்களை, ஆசிரியர் தேவைப்படும் பல்வேறு மாவட்ட பள்ளிகளுக்குமாற்ற முடிவு செய்துள்ளனர். விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, திருவள்ளூர், தர்மபுரி போன்ற மாவட்டங்களில், காலியிடங்கள்அதிகமாக உள்ளன. எனவே, தென்மாவட்டங்கள் மற்றும் மத்திய மாவட்டங்களைச்சேர்ந்த ஆசிரியர்கள், வரும், 27ம் தேதி முதல், எந்த மாவட்டத்திற்கும் அதிரடியாக மாற்றப்படலாம்.

அதேநேரம், பள்ளிக் கல்வித் துறையில் அதிகமாகபணியாற்றும் தென் மாவட்ட ஆசிரியர்கள், எப்படியாவது, சொந்த மாவட்டம் அல்லதுஅதையொட்டிய பகுதிகளுக்கு செல்ல, அதிகாரிகளை அணுகியுள்ளனர். ஆனால், சிபாரிசு கூடாது என, அரசிடமிருந்துகண்டிப்பான உத்தரவு உள்ளதால், அதிகாரிகளுக்குநெருக்கடியான நிலையும், ஆசிரியர்கள் மத்தியில் பதற்றமான சூழலும் ஏற்பட்டுள்ளது.

கல்வித் துறை முன்னின்று சமூக மாற்றத்தை உருவாக்க முடியாதா?

அப்படித்தான்ரொம்ப நாள் நான் நம்பிஏமாந்தேன். சி.டி.குரியன்தான்சொன்னார், ‘கல்வி மாற்றம் சமூகமாற்றத்தை உருவாக்காது. சமூக மாற்றம்தான் கல்விமாற்றத்திற்குத் தூண்டுகோலா அமையும்’ன்னு. அவர்சொன்னது சரி. எந்த நாட்டில், சமூக மாற்றம் ஏற்படாமல் கல்விமாற்றம் ஏற்பட்டிருக்கு? ‘கற்றவை எல்லாம் மறந்தபின்னால், எது தக்கி
நிற்கிறதோஅதுதான் கல்வி’ன்னார் பி.எஃப்.ஸ்கின்னர். அதாவது, வள்ளுவர் அவர்தம் எச்சத்தால் காணப்படும்ன்னுசொன்னாரே அதுதான் கல்வி. நீங்ககணக்கை மறக்கலாம், அறிவியலை மறக்கலாம், படிச்சதன் விளைவா எந்தப் பண்புகள்உங்கள் ரத்தத்தில் ஏறி நிக்குதோ அதுதான்கல்வி. சமூக மாற்றம் நிகழாமல்கல்வி மாற்றம் பற்றி பேசுவதுஅபத்தம்.
‘டேக்ஸானமிஆப் லிசனிங்’னு ஒருபுத்தகம். கேட்பதில் எத்தனை விதமான முறைகள்இருக்குங்கிறது சம்பந்தமான புத்தகம் அது. இப்ப நாமரெண்டு பேரும் பேசிகிட்டு இருக்கோம்இல்லையா? நான் பேசுறதை நீங்ககேட்குறதும், நீங்க பேசுறதை நான்கேட்குறதும் ஒரே நிலைல அமையுறதுஇல்லை. அப்புறம் நாம ரெண்டு பேரும்பேசிக்கிட்டு இருக்கும்போது மூணாவதா ஒருத்தர் வந்துஅமைதியா கவனிச்சுட்டு இருக்கார்னு வெச்சுக்குங்க. அவருடைய கேட்டலின் நிலைவேற. தவிர, ரெண்டு பேர்பேசிக்கிட்டிருக்கும்போது மூணாவதா ஒருத்தர் வந்துஉட்காரும்போது நம் பேச்சின் தொனிமாறும். கோபமாப் பேசினாகூட சத்தத்தைஅடக்கிக்குவோம். கவனிச்சுருக்கீங்களா? இப்படிப் பேசுதல், கேட்டலில் மொத்தம் 161 வகை இருக்குன்னு அந்தநூல்ல சொல்லியிருக்காங்க. அதாவது, ஒரு பொதுஇடத்தில் காது கேட்பது வேறுதிறன், இருவர் பேசும்போது காதுகேட்பது வேறு திறன், மைக்ரோபோனில் காது கேட்பது வேறுதிறன். இப்படி ஒவ்வொன்றும் ஒவ்வொருதிறன்கிறாங்க. அப்போ அம்பது பிள்ளைகள்காதுகளுக்கு ஒரு விஷயத்தைக் கொண்டுபோகவேண்டிய ஒரு ஆசிரியர் தன்னைஎவ்ளோ தகுதிப்படுத்திக்க வேண்டி இருக்கு? நூத்திஇருபது கோடிப் பேர் காதுகளுக்குஒரு விஷயத்தைக் கொண்டுபோக வேண்டிய அரசாங்கம் எவ்ளோதகுதிப்படுத்திக்க வேண்டி இருக்கு?
_ச.சீ.ராஜகோபாலன்.

கல்வியாளர்.

ஒரே கல்வியாண்டில் இரு வெவ்வேறு பட்டப்படிப்புகள் வெவ்வேறு கால அட்டவணையில் பயின்றாலும் அது பதவி உயர்விற்கு தகுதியுடையதல்ல என்பதற்கான நீதிமன்ற ஆணை..https://3.bp.blogspot.com/-2GEGXhNo3g4/V7_eX7mB52I/AAAAAAAAGEM/GufzYPmEBOcXPVPs6dfBWrRXNyNdc6EkgCLcB/s1600/judemrnt%2Bcopy%2B2.JPG

FLASH NEWS-'சிறுபான்மை பள்ளிகளுக்கு TET கிடையாது' - MADRAS HIGH COURT JUDGEMENT COPY

விபத்தில் தாய் அல்லது தந்தையை இழந்த மாணவர்களுக்கான உதவித் தொகை ரூ 75,000/- விண்ணப்பப் படிவம்


https://1.bp.blogspot.com/-TBig1mQaykQ/V63oSVM04eI/AAAAAAAAAw4/20iIYxo3_lwHTk8Ghc1URlxDPtjo4dL3wCLcB/s1600/20160812204459.jpg

தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் தேர்ச்சி அனுமதி மாதிரி படிவங்கள் (PDF-FILE)

*.5+ மாணவர்கள் பெயர் பட்டியல்...

*.முகப்பு தாள்..

3 ஆசிரியர்களுக்கு சி.பி.எஸ்.இ., நல்லாசிரியர் விருது


தமிழகத்தில், மூன்று தனியார் பள்ளி ஆசிரியர்கள் உட்பட, 34 பேருக்கு, சி.பி.எஸ்.இ., நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளை ஒட்டி, செப்., 5ம் தேதி,
ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. அந்நாளில், சிறந்த ஆசிரியர்களுக்கு, மத்திய, மாநில அரசுகள் தனித்தனியாக விருதுகள் அறிவிக்கின்றன.

இதில், சி.பி.எஸ்.இ., விருது கள், நேற்று அறிவிக்கப்பட்டன. நாடு முழுவதும், 34 பேருக்கு நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்பட உள்ளன. தமிழகத்தில், சென்னை, அடையாறு இந்து சீனியர் செகண்டரி பள்ளி துணை முதல்வர் ஏ.காசி விஸ்வநாதன்; ஈரோடு மாவட்டம், திண்டல், வேளாளர் வித்யாலயா முதல்வர் ஏ.வி.புவனேஸ்வரி; சேலம் மாவட்டம், ஜாகிரம்மா பாளையம், செந்தில் பப்ளிக் பள்ளி முதல்வர் சி.சீனிவாசன் ஆகியோர், விருது பட்டியலில் இடம் பெற்று உள்ளனர்

பிளஸ் 2வுக்கு செப்டம்பர், 8ல் காலாண்டு தேர்வு:


சென்னை: 'பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, செப்., 8 முதல், 23ம் தேதி வரை, காலாண்டு தேர்வுகள் நடக்கும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, ஆண்டு இறுதி பொதுத்
தேர்வை போல, காலாண்டு, அரையாண்டு தேர்வுகளை, அனைவருக்கும் பொதுவான வினாத்தாளுடன் நடத்த, பள்ளிகளுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. செப்., 8ல், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, காலாண்டு தேர்வு துவங்குகிறது. பிளஸ் 2வுக்கு, செப்., 8 முதல், 12 வரை, மொழி பாடங்களுக்கும்; மற்ற தேர்வுகள், செப்., 14 முதல், 23 வரையிலும் நடத்தப்பட உள்ளன. பத்தாம் வகுப்புக்கு, செப்., 8 முதல், 14 வரை மொழி பாட தேர்வுகளும்; மற்ற தேர்வுகள், செப்., 15 முதல், 23 வரையிலும் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே நாளில் 3 தேர்வு: பட்டதாரிகள் குழப்பம்

உயர் நீதிமன்றம், மின் வாரியம் மற்றும் தொழில்நுட்ப துறை தேர்வு என, ஒரே நாளில் மூன்று தேர்வுகள் நடக்கின்றன. இதனால், மூன்றுக்கும் விண்ணப்பித்தவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். மின் வாரியம் சார்பில் இளநிலை உதவியாளர், கள உதவியாளர், தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு, வரும், 27 மற்றும், 28ம் தேதிகளில் நடக்க உள்ளது.
தமிழக தொழில்நுட்ப கல்வித்துறையின் சார்பில் தட்டச்சு தேர்வும், 27 மற்றும், 28ல் நடக்கிறது. அதே நாட்களில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., சார்பில், உயர் நீதிமன்ற நீதிபதிகளின் உதவியாளர், தட்டச்சர் பணியிடங்களுக்கும் தேர்வு நடக்கிறது.
இந்த மூன்று தேர்வுகளுக்கும், பலர் விண்ணப்பித்துள்ளனர். இதனால், எந்த தேர்வை எழுதுவது என தெரியாமல், தேர்வர்கள் தவிக்கின்றனர்.

இதுகுறித்து தேர்வர்கள் கூறியதாவது: மின் வாரிய தேர்வு பல மாதங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கல்வித்துறை தேர்வும், ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. ஆனால்,
டி.என்.பி.எஸ்.சி., தேர்வு தான் மிக குறுகிய காலத்தில் அறிவித்து நடத்தப்படுகிறது.
டி.என்.பி.எஸ்.சி.,யை பொறுத்தவரை, மற்ற துறைகளின் தேர்வுகளை கணக்கிடாமல், தேர்வு தேதியை குழப்பமாக அறிவிப்பது தொடர்கிறது. சில குறிப்பிட்ட துறைகள் தேர்வை அறிவித்து விட்ட நிலையில், அதேநாளில் டி.என்.பி.எஸ்.சி.,யும் தேர்வை அறிவிக்காமல் தவிர்த்தால், அது தேர்வர்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

பெரியார் பல்கலை. சார்பில் ஆக. 27-இல் வேலைவாய்ப்பு முகாம்

பெரியார் பல்கலை. சார்பில் ஆக. 27-இல் வேலைவாய்ப்பு முகாம்
பெரியார் பல்கலைக்கழகம் சார்பில், வரும் 27-ஆம் தேதி பல்வேறு நிறுவனங்கள் கலந்துகொள்ளும் மெகா வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளதாக துணை வேந்தர் சி.சுவாமிநாதன் தெரிவித்தார்.
 இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி: பெரியார் பல்கலைக்கழக வாழ்வியப் பணி வழிகாட்டி மற்றும் பணியமர்த்த மையம், ஏ.வி.எஸ். சக்தி கைலாஷ் கல்வி நிறுவனங்கள் இணைந்து மெகா வேலைவாய்ப்பு முகாமை சேலம் சின்னக்கவுண்டாபுரம் பகுதியில் உள்ள ஏ.வி.எஸ். தொழில்நுட்பக் கல்லூரியில் நடத்துகிறது.
 பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களான ஹெச்.சி.எல். டேலண்ட் கேர்-கேப்ஜெமினி, ஏசெஸ் ஹெல்த், ஹிந்துஜா குளோபல் சொல்யூசன்ஸ், பொலாரிஸ், அன்வைன்ட் லேப், ஹெச்.சி.எஸ், நவிவ் மெடிகேமெண்ட், யுரேகா போர்ப்ஸ், ஈகுவ்டாஸ், குளோபல் இன்னோவ், யுடிஎல் டெக்னாலஜிஸ், பஸ்ட் அமெரிக்கன் போன்ற நிறுவனங்கள் இதில் கலந்துகொள்கின்றன.
 இந்த முகாமில் கலந்துகொள்ள விரும்பும் மாணவ-மாணவியர் இணையவழி மூலம் பதிவு செய்து கொள்ளலாம். பிஎஸ்சி (கணினி அறிவியல், ஐடி, எலக்ட்ரானிக்ஸ், கணிதம், இயற்பியல், புள்ளியல் மற்றும் பிசிஏ), 2015 மற்றும் 2016 ஆண்டில் தேர்ச்சி பெற்ற பிஎஸ்சி (அனைத்து பாடப் பிரிவுகளும்) பி.காம், பிபிஏ ஆகிய பாடங்களை பயின்ற மாணவியர் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம்.
 மேலும் விவரங்களுக்கு, பெரியார் பல்கலைக்கழக வாழ்வியப் பணி வழிகாட்டி மற்றும் பணியமர்த்த மைய இயக்குநர் பேராசிரியர் ஆர்.வெங்கடாசலபதியை 8220606572, 9150158111 செல்லிடப்பேசியிலும், ஏ.வி.எஸ். மற்றும் சக்தி கைலாஷ் கல்வி நிறுவன வேலைவாய்ப்பு அலுவலர்கள் பி.மணிகண்டன்-9486517743, ஆர்.ஜெயகுமார்-9698953790 செல்லிடப்பேசியிலும் அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பி.ஏ.பி.எட்., - பி.எஸ்சி.பி.எட்., புதிய பாடப்பிரிவு : கல்வியியல் கல்லூரிகளில் இந்த ஆண்டு அறிமுகம்:

''தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையால், ஒருங்கிணைந்த நான்காண்டு படிப்பாக, பி.ஏ.பி.எட்., மற்றும் பி.எஸ்சி.பி.எட்., பாடப்பிரிவுகள் இந்த ஆண்டு முதல், கல்வியியல் கல்லுாரிகளில் அறிமுகப்படுத்தப்படும்,'' என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
சட்டசபையில், 110 விதியின் கீழ் அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:

● பொறியியல் மாணவர்கள், இந்திய பொறியியல் பணித்தேர்வில் தேர்ச்சி பெறுவதற்காக, சென்னை, தர்மபுரி, கோவை, திருச்சி, திருநெல்வேலி மாவட்டங்களில், 10 லட்சம் ரூபாய் மதிப்பில் பயிற்சி மையங்கள் நிறுவப்படும்
● ஆண்டுதோறும், 10 அரசு பொறியியல் கல்லுாரிகளில் படிக்கும், 100 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, 15 நாட்கள் தொழில்நுட்பப் பயிற்சி பெற, வெளிநாட்டில் உள்ள பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவர்; இத்திட்டம், 1.50 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும்
● உலகப் புகழ் பெற்ற உயர்கல்வி ஆசிரியர்களின் சிறப்பு விரிவுரைகள் மற்றும் தொழிற்சாலைகளில் உள்ள சிறந்த நிபுணர்களின் உரைகளை, மாணவர்கள் கேட்டு பயன் பெற, 'வீடியோ கான்பரன்ஸ்' ஒலி ஒளியக மையம், சென்னையில் உள்ள தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தில், 75 லட்சம் ரூபாய் செலவில் நிறுவப்படும்
● மதுரையில் உள்ள, தமிழ்நாடு பாலிடெக்னிக் கல்லுாரியில், பொருள் சேதமில்லா தரச்சோதனை பயிற்சி மையம், 1 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்; இங்கு, ஆண்டுக்கு, 100 பேருக்கு, செய்முறை பயிற்சி அளிக்கப்படும்
● கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம்; காஞ்சிபுரம் மாவட்டம், பெரும்பாக்கம் ஆகிய இடங்களில், தலா, 8 கோடி ரூபாய் செலவில், புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி துவக்கப்படும்
● அனைத்து பல்கலை மற்றும் இணைவுக் கல்லுாரிகள், மேகக் கணினியத்தில் இணைக்கப்பட்டு, மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு சேவை வழங்கும் மையம், 160 கோடி ரூபாய் செலவில், அண்ணா பல் கலையில் நிறுவப்படும்; இத்திட்டம், 3 ஆண்டுகளில் நிறைவேற்றப்படும்
● அண்ணா பல்கலையில், 50 கோடி ரூபாய் செலவில், மோட்டார் வாகன தொழில்நுட்ப மையம், மோட்டார் வாகன தொழில் நிறுவனங்களுடன் இணைந்து நிறுவப்படும். மேலும், 5,000 பேர் அமரும் வசதி கொண்ட, ஒரு பெருங்கூட்டரங்கமும், 50 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும்
● அண்ணா பல்கலையில், சர்வதேச ஆராய்ச்சி மேம்பாடு மற்றும் பயிற்சி மையம், 50 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்
● தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலையின் மண்டல மையங்கள், விழுப்புரம் மற்றும் நீலகிரி மாவட்டங்களில், 12.50 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்
● தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையால், நான்காண்டு ஒருங்கிணைந்த பி.ஏ.பி.எட்., மற்றும் பி.எஸ்சி.பி.எட்., பாடப்பிரிவுகள், இந்த ஆண்டு கல்வியியல் கல்லுாரிகளில் அறிமுகப்படுத்தப்படும்
● மதுரை காமராஜர் பல்கலையில், நவீன உட்கட்டமைப்பு வசதிகளுடன் சிறந்த மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களுடன் கூடிய, ஒரு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை, 5 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும். மாணவர்கள் நலன் கருதி, 7 கோடி ரூபாய் செலவில், உள் விளையாட்டரங்கம், நுாலகம் கட்டப்படும்.
சூரிய மின் ஒளி, நிலத்தடி நீர் சேமிப்பு திட்டம், 'வைபை' வசதி, 5 கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும். விடுதி மேம்பாட்டு பணிகள், 1 கோடி ரூபாயில் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு முதல்வர்
அறிவித்தார்.

தடய அறிவியல் பணி: விண்ணப்பிக்க 3 நாளே அவகாசம்:

இளநிலை அறிவியல் அதிகாரி பணிக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்க, இன்னும் மூன்று நாட்களே அவகாசம் உள்ளது.தமிழக அரசின், தடய அறிவியல் துறையில் காலியாக உள்ள, 30 இளநிலை தடய அறிவியல் அதிகாரி பணியிடங்கள், நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளன. 
இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் குற்றவியலில், முதுநிலை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், அக்., 16ல் எழுத்து தேர்வை நடத்துகிறது. இதற்கு, ஜூலை, 29ம் தேதி, விண்ணப்ப பதிவு துவங்கியது. வரும், 28ம் தேதியுடன் விண்ணப்பங்களை பதிவு செய்யும் அவகாசம் முடிகிறது. விடுபட்ட பட்டதாரிகள், மூன்று நாட்களில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆசிரியர்களிடம், மாணவர்கள் அதிகப்பற்றுடன் நடந்து கொள்ள வேண்டும்: சகாயம் அறிவுரை

கம்மாபுரம்: 'நல்லாசிரியர்கள் வழிகாட்டுதலின் பேரில் படிக்கும் மாணவர்கள்அனைவரும் தனியார் பள்ளிக்கு இணையாகதேர்ச்சி பெற முடியும்' எனஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் பேசினார். கம்மாபுரம்அடுத்த இருப்பு அரசு மேல்நிலைப்பள்ளியில், மக்கள் பாதை இயக்கம்சார்பில் மாணவர்கள் விழிப்புணர்வு மற்றும் நலத்திட்டம் வழங்கும்விழா நடந்தது. மாவட்ட முதன்மை கல்விஅலுவலர் பாலமுரளி, துணை சேர்மன் கனகசிகாமணி, ஊராட்சித் தலைவர் கதிரொளி, மக்கள்பாதை இயக்க நிர்வாகி கேசவபெருமாள்முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் ராஜேந்திரன்வரவேற்றார். நிர்வாகிகள் சண்முகம், புஷ்பராஜ், கதிர்வேல் உட்பட பலர் பங்கேற்றனர்.

விழாவில், ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம், தலைமை தாங்கி, பேசியதாவது:
தமிழ்நாட்டில்எந்த மாவட்டத்தில் வேலை செய்தாலும் அரசுபள்ளிகளில் அனைத்து வசதிகளும் உள்ளதாஎன ஆய்வு செய்து, அங்குள்ளபிரச்னைகளை தீர்ப்பதையே கடமையாக கொண்டுள்ளேன். அரசுமூலம் கட்டப்படும் பள்ளி கட்டடங்கள் தரமாககட்டப்படுகின்றனவா, சாலைகள் தரமாக போடப்படுகின்றனவாஎன ஆய்வு செய்து, அவற்றைதரமாக அமைப்பதில் முழு வீச்சில் செயல்படுகிறேன்.
தனியார்பள்ளியில் படிக்கும் குழந்தைகள் பெற்றோர்களை டாடி, மம்மி எனகூப்பிடும் போது மகிழ்ச்சியடைகின்றனர். ஆனால் தமிழ்மண்ணில் பிறந்த குழந்தைகளுக்கு தமிழ்மொழியில் கற்பிக்க வேண்டும். அவர்களுக்கு தரமான கல்வி அரசுபள்ளிகளில் வழங்கப்படுகிறது. கடந்த 2011ல் மதுரையில் பணியாற்றியபோது, தனியார் பள்ளிக்கு இணையாகஅரசு பள்ளி தேர்ச்சியும், மதிப்பெண்இருக்க வேண்டும் என மாவட்ட கல்விஅலுவலருக்கு உத்தரவிட்டேன். அதன்படி, மாலை வகுப்புகள் நடத்தப்பட்டுதேர்ச்சி சதவீதத்தை உயர்த்தி, ஏழை எளிய மக்களின்குழந்தைகளுக்கு தரமான கல்வி வழங்கப்பட்டது.
அப்துல்காலம்'எனது உள்ளம் கவர் நாயகர்என்றால் எனக்கு ஆரம்ப காலபடிப்பில் பாடம் நடத்திய ஆசிரியர்கள்தான்' என்றார். எனவே, மாணவர்களாகிய நீங்கள்அதிகப்பற்றுடன் ஆசிரியர்களிடம் நடந்து கொள்ள வேண்டும். அதிக மதிப்பெண்கள் பெற்று டாக்டர், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., விஞ்ஞானிகளாகமாறும் சக்தியும், ஆற்றலும் உங்களிடம் உள்ளது. நானும் உங்களைபோல் அரசு பள்ளியில் படித்துதான் கலெக்டராக உள்ளேன்.
கடந்த2009ல் பொது தேர்வு முடிவுகள்வெளி வந்தபோது, அரசு பள்ளியில் படித்தமாணவர்கள் கதிர்வேல், ராஜ்கமல் இருவரும் 500க்கு 499 மதிப்பெண் எடுத்தனர். இருவரும் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்கள்.
அதிக மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கு அரசின் சிறப்பு திட்டத்தின்கீழ் 27 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது. மேலும், அவர்கள் விரும்பும்தனியார் பள்ளிகளில் பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கலாம். ஆனால்அவர்கள் இருவரும் அந்த தொகையை வாங்கமறுத்துவிட்டனர். ஏன் என கேட்டதற்குநாங்கள் இருவரும் அரசு பள்ளியிலேயே படிக்கவிரும்புகின்றோம் என்றனர். அது எனக்கு மகிழ்ச்சியைதந்தது.
அவர்கள்அரசு பள்ளியில் மேல் படிப்பு படித்து, 2011ல் பிளஸ் 2 பொது தேர்வில்ராஜ்கமல் 1,171, கதிர்வேல் 1,167 மதிப்பெண் எடுத்தனர். நல்லாசிரியர்கள் வழிகாட்டுதலின் பேரில் படிக்கும் மாணவர்கள்அனைவரும் தனியார் பள்ளிக்கு இணையாகதேர்ச்சி பெற முடியும். அதேபோல் மதிப்பெண் எடுக்க முடியும்.

மக்கள்பாதை என்பது ஏழை எளியமக்களுக்கு உதவி செய்யவும், தமிழ்வழியில் படிப்பதால் ஏற்படும் தாழ்வு மனப்பான்மையை போக்கஉருவாக்கப்பட்டது. இதன் மூலம் பள்ளிக்கு2 லட்சம் ரூபாய் மதிப்பில் கணினி, டேபிள், சேர், மின் விசிறிகள்வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம்பேசினார்

TNPSC EXAM DATE 2016-17:

TNPSC 2016-17
group 4
Exam  date : 16.10.16
Posts :
1st
Junior  assistant
Bill collector
File  surveyor
Draughtsman
2nd
Typist
3rd
Steno type
Group 1


Exam date :27.11.16

Posts:
1.deputy  collector
2.assistant commissioner
3.assistant director of rural development department

Group 2
interview post

 Date: 11.12.16

Posts:
1.Deputy commercial tax officer
2.Sub registor
3.Probation officer in  prision dptmnt
 4.Asst inspector of labour dptmnt
5.Junior employment officer
6.Special asst  in the vigilance and anti corruption dptmnt

7.Special branch asst  intelligence in police dptmnt
8.Asst section officer in tnpsc
9.asst inspecter in local and audit  dptmnt
10.superviser  in industrial and commerse dptmnt
................

VAO  exam
 Date: 8.1.17
 Village admistrative  officer

Group 2   exam
Noninterview post

Date :5.2.17

Posts:
1.Personal clerk in  tn public sevice
2.asst in  industrial and  commerse  dptmnt
3. Asst in  commisioner of revenue  administration dptmnt
4. Asst in  land  administration department
5. Asst  posts............etc

10th 12th quarterly examination time table:


TET CASE MINORITY SCHOOLS NOT COMPULSORY |CHENNAI HIGH COURT:

TET:சிறுபான்மைக்கல்வி நிறுவன ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு பொருந்தாது!சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

தமிழகத்தில் உள்ள அரசு உதவி பெரும் சிறுபான்மை பள்ளிஆசிரியர்கள் தகுதி தேர்வுகள் எழுத தேவையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்பளித்துள்ளது.
சிறுபான்மை பள்ளி ஆசிரியர்கள் 300 பேர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் குலுவாலி ரமேஷ், முரளிதரன் அடங்கிய அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. கட்டாய கல்வி உரிமைச் சட்டம் சிறுபான்மை பள்ளிகளுக்கு பொருந்தாது என்பதால் அதில் பணிபுரியும் ஆசிரியர்களை தகுதி தேர்வு எழுதுமாறு கட்டாயப்படுத்தக்கூடாது என்ற மனுதாரர்களின் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.
கட்டாய உரிமைச் சட்டத்தின் கீழ் சிறுபான்மை மற்றும் அரசு உதவி பெறும் சிறுபான்மை பள்ளிகளில் பணிபுரியும்ஆசிரியர்கள் தகுதி தேர்வு எழுத வேண்டும் என கடந்த 2011-ம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது.2011-ம்ஆண்டுக்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்களும் தகுதிதேர்வு எழுதுவது கட்டாயம் என்றும் இல்லை என்றால் அவர்களுக்கான சலுகைகள் நிறுத்தப்படும் எனவும் அரசு உத்தரவிட்டுள்ளதாக மனுதாரர்கள் மனுவில் கூறியிருந்தனர். தகுதி தேர்வு தேவையில்லை என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதன் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள சிறுபான்மை பள்ளிகளில் பணி புரியும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பயன்பெறுவார்கள்.சிறுபான்மைக்கல்வி நிறுவன ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு பொருந்தாது!
சிறுபான்மைக்கல்வி நிறுவன ஆசிரியர்களுக்கு ஆசிரியர் கல்வித் தகுதி தேர்வு பொருந்தாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், நிறுத்தப்பட்ட ஊதியத்தை 2 மாதத்தில் வழங்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

25/8/16

50% வரை தள்ளுபடி : பிஎஸ்என்எல் அசத்தல் அறிவிப்பு.!!

50% வரை தள்ளுபடி : பிஎஸ்என்எல் அசத்தல் அறிவிப்பு.!!

தொலைத்தொடர்பு சேவை வழங்குவதில் நிலவும் போட்டியை சமாளிக்கும் விதமாக பிஎஸ்என்எல் நிறுவனம் அன்லிமிட்டெட் 3ஜி மொபைல் டேட்டா சேவையினை ரூ.1,099க்கு வழங்குவதாக அறிவித்துள்ளது. இதோடு ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த டேட்டா திட்டங்களில் கூடுதல் டேட்டா வழங்குதாகவும் அறிவித்துள்ளது.

பிஎஸ்என்எல் டெந்வர்க் மேம்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதில் இருந்து பிஎஸ்என்எல் பயன்படுத்துவோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகின்றது. அன்-லிமிட்டெட் 3ஜி சேவையை வேகம் குறையாமல் வழங்குவதில் நாட்டிலேயே பிஎஸ்என்எல் முன்னிலை வகிக்கின்றது. அறிவிக்கப்பட்டிருக்கும் புதிய திட்டம் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதமாக இருக்கும் என பிஎஸ்என்எல் தலைவர் அனுப்பம் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.

பிஎஸ்என்எல் சந்தாதாரர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு மாதமும் அதிகரித்து வருகின்றது. மொபைல் பிரிவு பொருத்த வரை ஏப்ரல் மாத நிலவரப்படி பிஎஸ்என்எல் சுமார் 11.39 லட்சம் சந்தாதாரர்களை புதிதாகச் சேர்த்துள்ளது. இந்த எண்ணிக்கையானது ஏர்டெல் (9.78 லட்சம்), ஏர்செல் (5.72 லட்சம்), ரிலையன்ஸ் (1.1 லட்சம்), வோடபோன் (46,600) என்ற நிலையில் இருக்கின்றது.

தொலைத்தொடர்பு நிறுவனங்களுடனான போட்டியை சமாளிக்கும் விதமாக பிஎஸ்என்எல் நிறுவனம் தனது சேவைக்கான கட்டணங்களை சுமார் 67 சதவீதம் வரை குறைத்திருக்கின்றது. மேலும் ரூ.549 திட்டத்தில் 5ஜிபி 3ஜி டேட்டாவினை தடாலடியாக சுமார் 10 ஜிபி வரை உயர்த்தி வழங்கியுள்ளது.

சிறுபான்மையினர் பள்ளி ஆசிரியர் களுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமில்லை-சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள சிறுபான்மையினர் பள்ளி ஆசிரியர் களுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமில்லை என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்த கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தமிழக அரசு கடந்த 2011 நவம்பர் 15-ல் ஒரு அரசாணையை வெளியிட்டது. இதன்படி அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், சிறுபான்மையினர் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்துப் பள்ளிகளிலும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக புதிதாக நியமிக்கப்படுபவர்கள் தமிழக அரசு நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். 2010 ஆகஸ்ட் 28-ம் தேதிக்கு பின்னர் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டவர்கள் 5 ஆண்டுகளுக்குள் இந்த தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும் என உத்தரவிடப்பட்டது.
இந்த அரசாணை சிறுபான்மையினர் பள்ளிகளுக்கு பொருந்தாது என்று கூறி தமிழ்நாடு கத்தோலிக்க கல்வி சங்கம் மற்றும் 300-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் ஹூலுவாடி ஜி.ரமேஷ், எம்.வி.முரளிதரன் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு வருமாறு:
ஆசிரியர்களி்ன் தகுதியை உயர்த்து வதற்காக இந்த அரசாணையை தமிழக அரசு பிறப்பித்துள்ளது என்றும் இதுபோன்ற தேர்வுகளை நடத்த தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது என்றும் அரசு தலைமை வழக்கறிஞர் தனது வாதத்தில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த ஓர் உத்தரவில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள கட்டாய கல்வி உரிமை சட்டம் சிறுபான்மையினர் பள்ளிக்கூடங் களுக்கு பொருந்தாது என்று கூறி யுள்ளது என்பதை மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
சிறுபான்மையினர் பள்ளிக்கூடங் களை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் விதிகளை கொண்டு வரலாம். அதற்காக அந்தப் பள்ளிகளின் தன் மையை பாதிக்கும் விதமாக உத்தரவு பிறப்பிக்க முடியாது. சிறுபான்மை யினர் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களும் கட்டாயமாக ஆசிரியர் தகுதித்தேர்வு எழுத வேண்டும் என நிர்பந்தம் செய்ய முடியாது.
எனவே அரசு உதவிபெறும் மற்றும் உதவி பெறாத சிறுபான்மையினர் பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்களாக நியமிக்கப்படுபவர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வி்ல் தேர்ச்சி பெறவேண் டும் என தமிழக அரசு பிறப்பித்த அரசாணை செல்லாது. மேலும் 2010-ல் பணிக்கு சேர்ந்தவர்கள் 5 ஆண்டுகளுக் குள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வில்லை எனக்கூறி அவர்களுக்கான சம்பளத்தை அரசு வழங்காமல் உள்ளது. அந்த சம்பளத் தொகையை 2 மாதத்துக்குள் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும். தமிழக அரசைப் போல, புதுச்சேரி அரசும் ஆசிரியர் தகுதி தேர்வு குறித்து கடந்த 2015-ம் ஆண்டு அரசாணை பிறப்பித்துள்ளது. இந்த அரசாணை யும் புதுச்சேரியில் உள்ள சிறுபான்மை யினர் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்குப் பொருந்தாது.
இவ்வாறு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 காலாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு: செப்.8 தொடங்கி 23-ம் தேதி முடிவடைகிறது

எஸ்எஸ்எல்சி மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வுகள் செப்டம்பர் 8-ம் தேதி தொடங்கி 23-ம் தேதி முடிவடைகின்றன. இடையில் 13-ம் தேதி (செவ்வாய்க் கிழமை) பக்ரீத் விடுமுறை விடப்பட்டுள்ளது. தினமும் காலை 10 மணி முதல் மதியம் 12.45 மணி வரை தேர்வு நடைபெறும்.
எஸ்எஸ்எல்சி தேர்வு விவரம்:
செப்.8 (வியாழன்) - மொழித் தாள்-1
செப்.10 (சனி) - மொழித்தாள்-2
செப்.12 (திங்கள்) - ஆங்கிலம் முதல்தாள்
செப்.14 (புதன்) - ஆங்கிலம் 2-ம் தாள்
செப்.16 (வெள்ளி) - கணிதம்
செப்.19 (திங்கள்) - அறிவியல்
செப்.21 (புதன்) - விருப்ப மொழி
செப்.23 (வெள்ளி) - சமூக அறிவியல்
பிளஸ் 2 மாணவர்களுக்கு காலாண்டு தேர்வுகளும் செப்டம்பர் 8-ம் தேதி தொடங்கி 23-ம் தேதி முடிவடைகின்றன. தினமும் காலை 10 மணி முதல் மதியம் 1.15 மணி வரை தேர்வு நடைபெறும்.
பிளஸ் 2 தேர்வு விவரம்:
செப்.8 (வியாழன்) - மொழித் தாள்-1
செப்.9 (வெள்ளி) - மொழித் தாள்-2
செப்.10 (சனி) - ஆங்கிலம் முதல் தாள்
செப்.12 (திங்கள்) - ஆங்கிலம் 2-ம் தாள்
செப்.14 (புதன்) - வணிகவியல், மனையியல், புவியியல்
செப்.15 (வியாழன்) - கணிதம், விலங்கியல், நுண்ணுயிரியல், அரசியல் அறிவியல், கணக்கியல், தணிக்கையியல் உள்ளிட்ட பாடங்கள்
செப்.16 (வெள்ளி) - இந்திய பண்பாடு, கணினி அறிவியல், உயிரி-வேதியியல், சிறப்புத் தமிழ், புள்ளியியல் உள்ளிட்ட பாடங்கள்
செப்.19 (திங்கள்) - இயற்பியல், பொருளாதாரம், அலுவலக மேலாண்மை உள்ளிட்ட பாடங்கள்
செப்.21 (புதன்) - வேதியியல், கணக்குப்பதிவியல்
செப்.23 (வெள்ளி) - உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிகக் கணிதம்

'நீட்' தேர்வு முடிவை எதிர்த்து வழக்கு

நீட்' எனப்படும் மருத்துவக் கல்விக்கான பொது நுழைவுத் தேர்வு முடிவுகளை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் புதிய வழக்கு தொடரப்பட்டுள்ளது.இது தொடர்பாக பீஹாரைச் சேர்ந்த மருத்துவ மாணவர் ஷிவாங்கி சிங் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:
'நீட்' தேர்வு இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டன. வெவ்வேறு தகுதி நிலைகளின் அடிப்படையில், இரண்டுக்கும் வெவ்வேறு கேள்வித் தாள்கள் அளிக்கப்பட்டன; ஆனால், இரண்டுக்கும் சேர்த்து, தற்போது முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது, சட்டவிரோதமானது.இரண்டு தேர்வுகளுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளுக்கு ஏற்ப, இவற்றை சமன் செய்ய வேண்டும். அதனால், தற்போது வெளியிடப்பட்டுள்ள முடிவுகளை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற, நீதிபதிகள், ஏ.ஆர்.தவே, எல்.நாகேஸ்வர ராவ் ஆகியோர் அடங்கிய சுப்ரீம் கோர்ட் அமர்வு, 'நீட் தேர்வு குறித்த மற்ற வழக்குகளுடன், இந்தவழக்கும் சேர்த்து விசாரிக்கப்படும்' என, அறிவித்தது

பிளஸ் 2 துணைத்தேர்வு விண்ணப்பிக்க அவகாசம்

பிளஸ் 2 துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்க, தனித்தேர்வர்களுக்கு, ஆறு நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது. பிளஸ் 2 துணைத்தேர்வு, அக்டோபரில் நடக்க உள்ளது. இதற்கான விண்ணப்ப பதிவு தேதியை, அரசு தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தராதேவி அறிவித்துள்ளார்.
தேர்வு எழுத விரும்பும் தனித்தேர்வர்கள், கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள, அரசு தேர்வுத் துறை சேவை மையங்களுக்கு நேரில் சென்று, இன்று முதல் வரும், 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். நாளை கிருஷ்ண ஜெயந்தி மற்றும், 28ம் தேதி ஞாயிற்றுக்கிழமைஎன்பதால், இந்த நாட்களில் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்படாது. இதன்படி, தேர்வுக்கு விண்ணப்பிக்க, ஆறுநாட்கள் அவகாசம் தரப்பட்டுள்ளது. கூடுதல் விபரங்களை, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறியலாம்.

அரசு பொறியியல் கல்லூரி மாணவர்கள் 100 பேருக்கு வெளிநாட்டில் பயிற்சி: ஜெயலலிதா !

ஆண்டுதோறும் 10 அரசு பொறியியல் கல்லூரி மாணவர்கள் 100 பேருக்கு ரூ.1.5 கோடியில் வெளிநாட்டில் பயிற்சிஅளிக்கப்படும் என்று சட்டசபையில் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.மதுரையில் ரூ.4.75 கோடியில் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனைதொடங்கப்படும் என்று ஜெயலலிதா அறிவித்துள்ளார். இந்தமருத்துவமனை காமராஜர் பல்கலை கழக வளாகத்திற்குள் அமைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
சட்டசபையில் உயர்கல்வித் துறையில் இந்த ஆண்டு செயல்படுத்த உள்ள புதிய திட்டங்களை 110 விதியின் கீழ் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்பொறியியல் படிப்பு பயிலும் மாணவர்கள் இந்திய பொறியியற் பணித் தேர்வில் தேர்ச்சி பெறச் செய்யும் வகையில், அதற்கான பயிற்சி மையங்கள் சென்னை, தர்மபுரி, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படும். பல தனியார் பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணாக்கர்களின் திறன் மேம்படும் வகையில் வெளிநாட்டில் உள்ள கல்லூரிகளில் குறுகிய காலப்பயிற்சி பெற அந்த கல்லூரிகள் வகை செய்கின்றன. இது போன்ற வாய்ப்பு அரசு பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதே எனது விருப்பம் ஆகும்.எனவே, ஆண்டுதோறும் 10 அரசு பொறியியல் கல்லூரிகளில் பயிலும் 100 மாணாக்கர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, 15 நாட்கள் தொழில்நுட்பப் பயிற்சி பெறும் பொருட்டு அயல்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவர்.

 இத்திட்டம் ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.உலக அளவில் புகழ் பெற்ற உயர்கல்வி ஆசிரியர்களின் சிறப்பு விரிவுரைகள் மற்றும் தொழிற்சாலைகளில் உள்ள சிறந்த நிபுணர்களின் உரைகளை கேட்டு மாணாக்கர்கள் பயன் அடையும் வகையில் காணொலிக் காட்சி ஒலி ஒளியக மையம் சென்னையில் உள்ள தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தில் நிறுவப்படும்.இம்மையம் தொழில் நுட்பக் கல்லூரிகள் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு இந்த உரைகளை காணொலி மூலம் வழங்கும். இத்திட்டம் 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.