நமது சொந்த முயற்சிகளால் மட்டுமே நமக்கு விமோசனம்! யாருடைய கருணையாலும் தயவாலும் அல்ல!!அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே tjtnptf அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.
Download
தொடக்கக் கல்வித்துறையே! விலையில்லாப் பொருட்கள் வழங்குவதில் உள்ள குளறுப்படிகளை சரிசெய்!!! தமிழக அரசே! கல்வித்துறையே! பணிநிரவல் எனக்கூறி தனியார் பள்ளி ஆசிரியர்களை மிரட்டும் போக்கை கைவிடு!!! தமிழக அரசே! கால நீடிப்பு செய்து காலம் தாழ்த்தாமல் பழைய ஓய்வுதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்து!!! மத்திய அரசே! பொது மக்களின் கோரிக்கைகளை ஏற்று மக்களைப் பாதிக்கும் கொள்கைகளைக் கைவிடு!!!
நமது கோரிக்கைகளின் நிறைவேற்றம் நாம் அரசுக்கு கொடுக்கும் அழுத்தத்தை பொறுத்தது...!!! ஊழலையும் இலஞ்சத்தையும் அரசியலாக நினைப்பவர்களைப் புறக்கணிப்போம்!!!... நியாயமான தியாகமான மக்களுக்கான அரசியல் எது என்பதைத் தீர்மானிப்போம்...!!!

30/11/12

அகஇ - பள்ளி வளர்ச்சி திட்டம் (SCHOOL DEVELOPMENT PLAN) தயார் செய்யப்பட்டு பள்ளி அளவிலும், வட்டார அளவிலும் வைக்க இயக்குனர் உத்தரவு.

வட்டியுடன் மின்கட்டணம்: 300 அரசு பள்ளிகள் அதிர்ச்சி

மதுரை மாவட்டத்தில் மின் கட்டணம் செலுத்தாத, 300 அரசு பள்ளிகளுக்கு, வட்டியுடன் மீண்டும் கட்டண ரசீது அனுப்பி, மின்வாரியம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வளவு அதிக தொகையை செலுத்த முடியாது என்பதால், வட்டியை ரத்து செய்ய வேண்டுமென சம்பந்தப்பட்ட பள்ளிகள் தரப்பில் மின்வாரியத்திற்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் மேலமடை உட்பட, 300 தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகள், 2009 ம் ஆண்டு முதல், மின் கட்டணம் செலுத்தவில்லை. ஜனவரியில் பள்ளிகளின் மின் இணைப்பை வாரியம் துண்டித்தது. மின்சாரம் இன்றி மின்விசிறி, விளக்குகள் செயல்படாததுடன், "கணினி வழி கற்றல்&' திட்டமும் முடங்கியது. 

பள்ளி கல்வித்துறை அதிகாரிகளிடம் இப்பிரச்னை தெரிவிக்கப்பட்டது. பள்ளிகள் செலுத்த வேண்டிய கட்டண விவரங்கள், மின்வாரியம் மூலம் பெற்று அனுப்பப்பட்டன. இதற்குரிய நிதியை ஒதுக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கின்றனர். 

இதனிடையே நிலுவை கட்டணத்தை வட்டியுடன், செலுத்த மீண்டும், ரசீது அனுப்பி உள்ளது மின்வாரியம். தலைமையாசிரியர்கள் கூறுகையில், "மின்வாரியம் அனுப்பியுள்ள புதிய ரசீது குறித்து மேலிடத்தில் அனுமதி பெற, மேலும் தாமதம் ஏற்படும். எனவே, வட்டியை ரத்து செய்ய வேண்டும்" என்றனர்.

டி.இ.டி., இறுதி தேர்வுப் பட்டியல் வெளியிடுவதில் இழுபறி - DINAMALAR

டி.இ.டி., இறுதி தேர்வுப் பட்டியல் வெளியிடுவதில், தொடர்ந்து இழுபறி நிலை நிலவுவதால், தேர்வு பெற்றவர்கள், தவியாய் தவித்து வருகின்றனர். இதுமட்டுமின்றி பாட வாரியாக உள்ள ஆசிரியர் காலி இடங்களையும், பள்ளி கல்வித்துறை, இப்போதே, இணையதளத்தில் வெளியிட வேண்டும் எனவும், தேர்வு பெற்றவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

டி.இ.டி., தேர்வில், தேர்ச்சி பெற்றதும், மதிப்பெண் மற்றும் இன சுழற்சி அடிப்படையில், தகுதி வாய்ந்த ஆசிரியரை தேர்வு செய்ய, முதலில் டி.ஆர்.பி., திட்டமிட்டிருந்தது. சென்னை, ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில், "டி.இ.டி., தேர்வு, ஒரு தகுதித் தேர்வே; அதன்பின், ஆசிரியரை தேர்வு செய்ய, வேறொரு விதிமுறைகளை உருவாக்க வேண்டும்' என, உத்தரவிடப்பட்டது.

இதைத் தொடர்ந்து, பிளஸ் 2, பட்டப் படிப்பு, ஆசிரியர் பயிற்சி பட்டயப் படிப்பு, பி.எட்., ஆகியவற்றுக்கு, 40 மதிப்பெண், டி.இ.டி., தேர்வுக்கு, 60 மதிப்பெண் என, 100 மதிப்பெண் கணக்கிட்டு, அதனடிப்படையில், தகுதியான ஆசிரியரை தேர்வு செய்யும் புதிய முறையை, தமிழக அரசு அறிவித்தது.

ஜூலையில் தேர்வு பெற்ற, 2,448 பேர் மற்றும் அக்டோபரில் தேர்வு பெற்ற, 19 ஆயிரம் பேருக்கும், புதிய தேர்வு முறை கணக்கிடப்பட்டு, அதனடிப்படையில், இறுதி தேர்வுப் பட்டியல் தயாரிக்கும் பணியில், டி.ஆர்.பி., ஈடுபட்டுள்ளது. அக்., தேர்வில் தேர்வு பெற்றவர்களில், 2 சதவீதம் பேர், தகுதி இல்லாதவர்களாக இருப்பதாக, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்ததால், தேர்வு பெற்றவர்கள் மத்தியில், பீதி நிலவி வருகிறது.

இதனால், இறுதி தேர்வுப் பட்டியலை, ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 26ம் தேதி, பட்டியல் வெளியாகும் என, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்திருந்தன. ஆனால், தற்போது, எந்த தகவலையும் வெளியிடாமல், "பணிகள் நடக்கின்றன; விரைவில் வெளியிடுவோம்" என, தொடர்ந்து கூறி வருகின்றன.

இதுதொடர்பாக, ஏராளமானோர் தினமும், டி.ஆர்.பி., அலுவலகத்திற்கும், பத்திரிகை அலுவலகங்களுக்கும் போன் செய்து, கேட்டபடி உள்ளனர். ஆனால், டி.ஆர்.பி., அதிகாரிகள், தொடர்ந்து மவுனம் காக்கின்றனர். இது, தேர்வு பெற்றவர்கள் மத்தியில், மேலும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

தகுதி வாய்ந்தவர்களின் பட்டியலை, வெளிப்படையாக வெளியிட, டி.ஆர்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பாட வாரியாக உள்ள காலி இடங்கள் பட்டியலை, பள்ளி கல்வித்துறை, இப்போதே, இணையதளத்தில் வெளியிட வேண்டும் எனவும், தேர்வு பெற்றவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

29/11/12

5-ம் வகுப்பு மாணவர் மொழிப் பாடத்தை புரிந்து வாசிக்க தெரிந்திருக்க வேண்டும்

5-ம் வகுப்பு மாணவர் தமிழ், ஆங்கில பாடத்தை புரிந்து வாசிக்கவும், வாசித்த கருத்தை தெளிவாக சொல்லவும் தெரிய வேண்டும் என்று வத்திராயிருப்பு வட்டார வளமைய மேற்பார்வையாளர் சு.ஜெயலட்சுமி கூறினார். அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், வத்திராயிருப்பு வட்டார
வளமையத்திற்குட்பட்ட தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு மூன்று கட்டங்களாக, தலா இரு நாட்கள் நடைபெறும் எளிமை படுத்தப்பட்ட செயல்வழிக் கற்றல் முறை பயிற்சியை புதன்கிழமை தொடங்கி வைத்து பேசுகையில் அவர் கூறியதாவது:

தொடக்க நிலையில் 5-ம் வகுப்பு முடிக்கும் மாணவர் மொழிப் பாடத்தை புரிந்து வாசிக்க தெரிந்திருப்பதுடன், சுயமாய் சிந்திக்கக் கூடிய ஆற்றல் பெற்றவராய் திகழ வேண்டும். எளிய வாழ்க்கைக் கணக்குகளை செய்யக் கூடிய ஆற்றல் பெற்றிருக்க வேண்டும்.

மருத்துவமனைக்குச் செல்லும் போது அனைத்து நோயாளிகளுக்கும் ஒரே மாத்திரையை மருத்தவர் கொடுப்பது இல்லை. அந்தந்த நோய்க்கு தக்கவாறு மாத்திரை தருகிறார். அதுபோல, வகுப்பில் அனைத்து மாணவருக்கும் மொத்தமாய் பாடம் கற்றுக் கொடுப்பதால் பின் தங்கிய மாணவர்கள் பயனடைய இயலாது. பின்தங்கிய மாணவர்கள் பின்தங்கியே போய்விடுவார்கள். அனைவரும் கற்று சிறந்தவர்களாக உருவாகுவதற்காகவே அரசு செயல்வழிக் கற்றல் முறையை அமல்படுத்தியுள்ளது. முதல் 4 வகுப்புகளுக்கு ஏ.பி.எல். முறையில் தான் கற்றுத்தர வேண்டும். 6 குழுக்களாக உட்கார்ந்துதான் மாணவர்கள் கற்க வேண்டும். கடந்த ஆண்டுகளில் மாணவர்களின் அடைவுத் திறனுக்கு ஏற்றவாறு படிக்கலாம். ஆனால் அனைத்து மாணவர்களும் குறிப்பிட்ட பருவத்தில் முழு அட்டையையும் படித்து முடித்திருக்க வேண்டும்.

தற்போது சமச்சீர் புத்தகத்தில் உள்ள பாடங்கள் மட்டுமே ஏ.பி.எல். அட்டையில் தரப்பட்டுள்ளது. சின்னங்கள், அட்டைகள் எண்ணிக்கை மிகவும் குறைக்கப்பட்டுள்ளது. சின்னத்தைப் பார்த்த உடனே என்ன செயல்பாடு என்பது தெரியும். சமச்சீர் புத்தகத்தை வாசிப்பு, வீட்டுப் பாட வேலை, வர்ணம் கொடுத்தல், அதில் உள்ள செயல்பாடுகளை செய்வதற்குத்தான் பயன்படுத்த வேண்டும். அனைத்து தரப்பு மாணவர்களும் தரமான கல்வி பெற வேண்டும் என்பதற்காக அரசு செயல்படுத்தியுள்ள இந்த பாடமுறையில் ஆசிரியர்கள் கற்றுத்தந்து மாணவர்களை நாட்டிற்கு பிரயோஜனம் உள்ள குடிமக்களாக உருவாக்க வேண்டும் என்றார் அவர். பயிற்சியில் 92 ஆசிரியர்கள் கலந்து கொண்டுள்ளனர். பயிற்சியின் கருத்தாளர்களாக ஆசிரியப் பயிற்றுநர்கள் செயல்பட்டனர்.

முப்பருவ கல்வி: புத்தகங்களுக்கு ஒப்புதல் பெற டிசம்பர் 7 கடைசி

முப்பருவ கல்வி முறை திட்டத்தின் அடிப்படையில் தயார் செய்யப்பட்ட புத்தகங்களை, ஒப்புதல் பெற, வரும், டிசம்பர் 7ம் தேதி கடைசி நாளாகும். முப்பருவ முறை திட்டத்தின் கீழ், 2012-13ம் கல்வி ஆண்டில், 1 முதல் 8ம் வகுப்புகள் வரை, இறுதி செய்யப்பட்ட, மூன்றாம் பருவ பாடத்திட்டம் பெற்றோர், மாணவர், பள்ளிகள் மற்றும் பொது மக்கள் பார்வைக்காக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மாநில பொதுப் பள்ளி கல்வி வாரியம் மற்றும் பள்ளி கல்வி இயக்குனர் தலைவர் வெளியிட்ட அறிக்கை: மாநில பொதுப் பள்ளி கல்வி வாரியத்தால் ஒப்புதல் வழங்கப்பட்ட, மூன்றாம் பருவ பாடத்திட்டத்தின் அடிப்படையில், 1 முதல் 8 வகுப்புகளுக்கு, தமிழ் பாடம் நீங்கலாக, இதர பாடப் புத்தகங்களை, முப்பருவ கல்வி முறை திட்டத்தின் அடிப்படையில், தயார் செய்யப்பட்ட புத்தகங்களுக்கு ஒப்புதல் பெற விரும்புவோர், பாடப் புத்தகங்களின், இரண்டு நகல்களை, "உறுப்பினர் - செயலர் மாநில பொதுப் பள்ளி கல்வி வாரியம் மற்றும் பள்ளி கல்வி இணை இயக்குனர் (இடைநிலைக் கல்வி), கல்லூரி சாலை, சென்னை-6&' என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
பாடப் புத்தகங்கள், மல்டி கலரிலும், ஏ4 அளவிலும், 80 ஜி.எஸ்.எம்., ஹைடெக் மப்லித்தோ பேப்பரிலும், சிடிபி பிரின்டிங்கிலும், 200 ஜி.எஸ்.எம்., வர்ஜின் கேட்டெட் போர்டு அட்டையும் இருக்க வேண்டும். ஒவ்வொரு பாடப் புத்தகத்தின் தோராய விலை குறிப்பிட வேண்டும்.
ஒன்று முதல் 8ம் வகுப்புகளுக்கு தமிழ் பாடம் நீங்கலாக இதர பாடப் புத்தகங்கள் அனுப்பி வைக்க வேண்டும். வரைவு பாடப்புத்தகங்களுக்கு ஒப்புதல் அளிப்பது மாநில கல்வி வாரியத்தின் இறுதி முடிவுக்குட்பட்டது.
7ம் தேதி மாலை, 5:00 மணிக்குள் அனுப்பப்பட வேண்டும். முப்பருவ முறை திட்டத்தின் கீழ், 2012-13ம் கல்வி ஆண்டில், 1 முதல் 8ம் வகுப்புகள் வரை, இறுதி செய்யப்பட்ட, மூன்றாம் பருவ பாடத்திட்டம் மாநில பொதுப்பள்ளி கல்வி வாரியத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்டு பெற்றோர், மாணவர், பள்ளிகள் மற்றும் பொது மக்கள் பார்வைக்காக www.dse.th.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.   இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.

64 உடற்கல்வி படிப்புகளுக்கு விண்ணப்பிக்க நவ., 30 கடைசி

தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழத்தின் தொலைதூரக் கல்வி நிறுவனம் மூலம் பயிற்றுவிக்கப்படும் 64 வகையான உடற்கல்வி படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு வரும் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
எம்பிஏ பொது, எம்பிஏ ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட், எம்.எஸ்சி யோகா, யோகா தெரபி, சைக்காலஜி, யோகா நேச்சுரோபதி, டிப்ளமோ இன் யோகா, பிட்னஸ் அண்டு நியூட்ரிஷன் உள்ளிட்ட 64 வகையான எம்.பி.ஏ., எம்.எஸ்சி, பி.எஸ்சி., டிப்ளமோ மற்றும் சான்றிதழ் உடற்கல்வி படிப்புகள் தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழத்தின் தொலைதூரக் கல்வி நிறுவனம் மூலம் பயிற்றுவிக்கப்படுகின்றன.

இந்தப் படிப்புகளுக்கான காலம், தகுதி, கல்விக் கட்டணம், விண்ணப்ப படிவம் போன்ற விவரங்களை பெற www.tnpesu.org என்ற இணையதளத்தை பார்க்கவும்.

28/11/12

கிராம பகுதிகளில் இடைநிற்கும் மாணவர்கள் அதிகரிப்பு

கட்டாயக்கல்வி சட்டம் அமல்படுத்தி, இரண்டாண்டுகளாகியும், பள்ளியில் இடைநிற்கும், மாணவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியாத நிலை காணப்படுகிறது. தீவிர நடவடிக்கை இல்லாததால், கிராமப்பகுதிகளில் இடைநிற்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அனைவருக்கும் கல்வி இயக்கக அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில், 2010, ஆகஸ்ட் மாதத்தில் கட்டாயக்கல்வி சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், ஒன்றாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரை, அனைவரும் கல்வி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பொதுவாக, பள்ளிகளில் ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரை படிக்கும், 10 சதவீதம் மாணவர்கள் இடைநிற்கும் நிலை உள்ளது. இதை மறைத்து, பெரும்பாலான பள்ளிகளில், புள்ளி விவரங்கள் தயாரிக்கப்படுகிறது. கட்டாயக்கல்வி சட்டத்தில், இடைநிற்கும் மாணவர்களின் எண்ணிக்கையே இருக்கக்கூடாது எனவும், இதற்காக, மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை, கடந்த சில ஆண்டுகளுக்கு முன், அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில், அனைவரையும் பள்ளியில் சேர்ப்பதற்கான பிரச்சாரம், "பிரிட்ஜ் கோர்ஸ்&' மையங்கள் என, பல்வித செயல்பாடுகள் இருந்தன. தற்போது, அவையும் செயல்படுத்தப்படுவதில்லை. இதனால், கிராமப்பகுதிகளில், இடைநிற்கும் மாணவர்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவற்றை தடுத்து நிறுத்தவும், அனைவருக்கும் கல்வி வழங்கவும், தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து, அனைவருக்கும் கல்வி இயக்கக அலுவலர் ஒருவர் கூறியதாவது: அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் கீழ், அனைத்து மாணவர்களையும், பள்ளிகளில் சேர்ப்பதற்கான, பல்வேறு செயல்திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

பள்ளியில், இடைநிற்கும் மாணவர் எண்ணிக்கை அதிகமாக உள்ள பகுதிகளில், சிறப்பு பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு, மூன்று மாதம் வரை பயிற்சி வழங்கி, அந்தந்த வயதுக்குரிய வகுப்புகளில் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.

பல குழந்தைகளை, பெற்றோரே பள்ளிக்கு அனுப்பாமல், விவசாயம் உட்பட, பல்வேறு பணிகளுக்கு அனுப்பி விடுகின்றனர். கலெக்டரிடம் புகார் கொடுத்து, போலீஸ் மூலம் மிரட்டி, இடைநின்ற மாணவனை பள்ளிக்கு வரவழைத்தாலும், ஒரு சில நாட்கள் மட்டுமே வருகின்றனர். இதனால், இடைநிற்கும் மாணவர்களின் எண்ணிக்கையை குறைக்க முடியாத நிலை உள்ளது.

உயர் அதிகாரிகள் கண்டிப்பார்களோ என்ற பயத்தில், ஆசிரியர்களும், தலைமை ஆசிரியர்களும் இடைநிற்கும் மாணவர் எண்ணிக்கையை மறைத்து விடுகின்றனர். இடையில் நிற்கும் மாணவன், தனியார் பள்ளியில் சேர்ந்து விட்டதாகவோ, வேறு ஊருக்கு மாறுதல் பெற்றுச் சென்றதாகவோ, கணக்கு காட்டி விடுகின்றனர். தீவிர நடவடிக்கை இல்லாததால், கிராமப்பகுதிகளில் இடைநிற்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவ்வாறு, அவர் கூறினார்

மாற்றுப்பணியால் பணிச்சுமை ஆசிரியர் பயிற்றுநர்கள் தவிப்பு

ஏற்கனவே பணிச்சுமை உள்ள நிலை யில் தங்களுக்கு முதுகலை ஆசிரியர் மாற்றுப்பணி வழங்குவது மேலும் சுமையை அதிகரித்துள்ள தாக ஆசிரியர் பயிற்றுநர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அனைவருக்கும் கல்வித்திட்டத்தின் கீழ் ஆசிரியர் பயிற்றுநர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் பள்ளிகளில் ஆய்வு, ஆசிரியர்களுக்கு பயிற்சி, தகவல்கள், மாணவர்கள், பள்ளிகள்
தொடர்பான புள்ளி விபரங்கள் சேகரித்தல் என பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு மேல்நிலைப்பள்ளிகளில் முது கலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே இவர்களுக்கு வாரத்தில் 2 நாட்கள் இப்பள்ளிகளில் வகுப்பெடுக்கும் பணி கூடுதலாக வழங்கப்படுகிறது.
ஆசிரியர் பயிற்றுநர்கள் கூறுகையில், ஏற்கனவே நாங்கள் பணிச்சுமையில் தவித்து வருகிறோம். இந்நிலையில் இந்த மாற்றுப்பணிக்காக மாணவர்களுக்கு வகுப்பெடுக்க தயாராவது உள்ளிட்ட கூடுதல் பணிகளால் பணிச்சுமை அதிகரித்துள்ளது. மேலும் அந்தந்த ஒன்றியத்திற்குள் பணி வழங்காமல், பல கிமீ தூரமுள்ள வெளியூர்களில் பணி வழங்குவதாலும் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளோம் என்றனர்.
வட்டார வள மைய ஆசிரியர்கள் முன்னேற்ற சங்க தலைவர் சம்பத் கூறுகையில்,  பட்டதாரி ஆசிரியர்களைக் கொண்டு மேல்நிலைப்பள்ளிகளில் வகுப்பெடுக்க அதிகாரிகள் உத்தரவிடலாம். இந்த பயிற்றுநர்களுக்கு அவசியம் பணி வழங்கியே ஆக வேண்டுமெனில், ஒன்றியத்திற்குள்ளேயே இந்த மாற்றுப்பணியை வழங்கலாம். ஒன்றியம் விட்டு ஒன்றியம் இவர்களை அனுபினால் இவர்களுக்கான பயணப்படியை வழங்க வேண்டும் என்றார்.

மாணவிகளுக்காக செயல்படுத்தப்பட உள்ள இலவச நாப்கின் திட்டத்தை ஒருங்கிணைக்க அந்தந்த பள்ளி ஆசிரியர் ஒருவரை நியமிக்க பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக பள்ளி கல்வி இயக்குநரின் உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது:
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் உயர்நிலை, மேல்நிலை வகுப்புகளில் பயில்கின்ற 10 வயது முதல் 18 வயது வரை 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு இலவச நாப்கின் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக பள்ளிகளில் நாப்கின் வெண்டிங் மிஷின் பொருத்தப்படுகிறது.
மாணவிகள் நாப்கின் வெண்டிங் மெஷினை பயன்படுத்தி சுகாதாரமாக இருப்பதற்கு உதவும் வகையில் ஒவ்வொரு பள்ளிக்கும் இந்த திட்டம் சார்ந்த பணிகளை கண்காணிக்கவும், ஒருங்கிணைக்கவும் அப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவரை நியமனம் செய்ய முதன்மை கல்வி அலுவலருக்கு அறிவுரை வழங்கப்படுகிறது. மேலும் மாநில அளவில் என்.எஸ்.எஸ் திட்ட இணை இயக்குநர் பொறுப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

வி.ஏ.ஓ., தேர்வு முடிவை வெளியிட தடை கோரி மனு

வி.ஏ.ஓ. தேர்வு முடிவை வெளியிட தடை கோரி, மதுரை ஐகோர்ட் கிளையில், மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் எனத் தெரிகிறது.
முதுகுளத்தூர் அருகே கீழகன்னிசேரி சரவணன் உட்பட, 4 பேர் தாக்கல் செய்த மனு: வி.ஏ.ஓ.,க்கள், 3488 பேரை நியமனம் செய்ய, 2011 பிப்., 20 ல் தேர்வு நடந்தது. இதில், ஆதி திராவிடர்களுக்கான, 1077 பின்னடைவு பணியிடங்கள் அடங்கும். நாங்கள் தேர்வு எழுதினோம். 2011 ஜூலை, 19 ல் முடிவு வெளியிடப்பட்டது. 

பின்னடைவு பணியிடங்களில், 270 பேர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டனர். பணியில் சேராதவர்கள், பணியிலிருந்து விலகியவர்கள், வேறு வேலைகளுக்குச் சென்றவர்களால் ஏற்படும், காலிப் பணியிடங்களில் எங்களை நியமிப்பதாக, அரசு தெரிவித்தது. மேலும், 1870 வி.ஏ.ஓ.,க்களை நியமிக்க, 2012 ஜூலை, 9 ல் அரசு அறிவிப்பு வெளியிட்டது. 

ஏற்கனவே, பணியில் சேராமல் ஏற்பட்ட, காலி இடங்களையும் சேர்த்து அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். குரூப் 2 தேர்வில், ஏற்கனவே வி.ஏ.ஓ.,தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களும் பங்கேற்றுள்ளனர். இதனால், காலிப் பணியிடங்கள் ஏற்படும். முதலில், வி.ஏ.ஓ., தேர்வு முடிவு வெளியிட்டால், எங்களது உரிமை, பணிவாய்ப்பு பாதிக்கப்படும். 

குரூப் 2 தேர்வு முடிவை முதலில் வெளியிட வேண்டும். வி.ஏ.ஓ.,தேர்வு முடிவை வெளியிட, தடை விதிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

26/11/12

உடற்கல்வி ஆசிரியர் 1,000 பேர் நியமனம்

கல்வித்துறையில், நான்காவது நாளாக நேற்று நடந்த பணி நியமன கலந்தாய்வில், உடற்கல்வி ஆசிரியர், 1,025 பேர் உட்பட, 1,453 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.

கடந்த, 21ம் தேதி, அமைச்சுப் பணியில் இருந்து, தகுதி வாய்ந்தவர்களுக்கு, முதுகலை ஆசிரியர் பணி வழங்குவதற்கான கலந்தாய்வு நடந்தது. 22ம் தேதி, ஓவிய ஆசிரியர் நியமன கலந்தாய்வும்; 23ம் தேதி, காவலர் மற்றும் துப்புரவு பணியாளர் நியமன கலந்தாய்வும் நடந்தது. நான்காவது நாளான நேற்று, 1,025 உடற்கல்வி ஆசிரியர், கலை ஆசிரியர், 304 பேர், தையல் ஆசிரியர், 84 பேர் மற்றும் இசை ஆசிரியர், 40 பேர் உட்பட, 1,453 பேருக்கான நியமனம் நடந்தது.

அந்தந்த மாவட்ட தலைமை இடங்களில், இணையதளம் வழியாக, கலந்தாய்வு நடந்தது. சென்னை மாவட்டத்தில், உடற்கல்வி ஆசிரியர், 31 பேர், இசை ஆசிரியர், இரண்டு, ஓவிய ஆசிரியர், நான்கு, தையல் ஆசிரியர், மூன்று பேர் என, 40 ஆசிரியர் பணியிடங்கள், ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதற்கான கலந்தாய்வு, சேத்துப்பட்டு, எம்.சி.சி., பள்ளியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் நடந்தது.

"மாநிலம் முழுவதும், அனைத்து பணி நியமனங்களும் நடந்து முடிந்தன; 1,453 பேருக்கும், சம்பந்தபட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், பணி நியமன உத்தரவுகளை வழங்கினர்&' என, பள்ளி கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

சத்துணவு திட்டத்தில் வெஜிடபிள் பிரியாணி சென்னை, ஸ்ரீரங்கம் பள்ளியில் அடுத்த வாரம் தொடக்கம்

சத்துணவு திட்டத்தில் வெஜிடபிள் பிரியாணி போன்ற புதிய உணவுகளை தயாரிக்க சத்துணவு மற்றும் அங்கன்வாடிகளில் பணிபுரியும் சமையலர்களுக்கு பிரபல சமையல் கலைஞர் தாமு உள்ளிட்டோர் தீவிர பயிற்சி அளித்து வருகின்றனர்.
பள்ளி செல்லும் குழந்தைகள் எண்ணிக்கையை அதிகரிக்க, 1982ல் சத்துணவு திட்டத்தை அப்போதைய முதல்வர் எம்ஜிஆர் தொடங்கி வைத்தார். இந்நிலையில், ‘சத்துணவு சாப்பிடும் குழந்தைகள் நலன் கருதி 13 வகையான கலவை சாதங்கள் வழங்கப்படும். 4 வகையான முட்டை மசாலாக்களும் வழங்கப்படும்’ என்று கடந்த 2ம் தேதி சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இந்த திட்டம் அடுத்த வாரம் நடைமுறைக்கு வருகிறது. புதிய வகை சமையல் செய்வது குறித்து அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் பிரபல சமையல் கலைஞர்களால், சத்துணவு மற்றும் அங்கன்வாடி சமையலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
பிரபல சமையல் கலைஞர் தாமு தலைமையிலான குழுவினர் மதுரை மண்டலத்தில் உள்ள சத்துணவு மற்றும் அங்கன்வாடி சமையலர்களுக்கு பயிற்சி அளித்தனர். ஓட்டல் சென்டர் பாயின்ட் சென்னை நிறுவன தலைமை சமையல் கலைஞர் கண்ணன், எம்பி இன்ஸ்டிடியூட் ஆப் கேட்டரிங் டெக்னாலஜி கல்லூரியை சேர்ந்த விரிவுரையாளர் சத்தியநாராயணன் தலைமையிலான குழுவினரும் பயிற்சி அளித்து வருகின்றனர்.
சென்னையில் உள்ள பிரபல ஓட்டல்களின் சமையல் கலைஞர்களும் மாவட்டங்களில் முகாமிட்டு சமையல் பயிற்சி அளித்து வருகின்றனர். இப்பயிற்சி இந்த வாரத்தில் முடிகிறது. அடுத்த வாரத்தில் புதிய சத்துணவு முறை அமலுக்கு வருகிறது. முதல் கட்டமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மையத்தில் மட்டும் புதிய சத்துணவு வழங்கப்படும். இதன் வெற்றியை தொடர்ந்தே மற்ற பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்படும்.
அந்த வகையில் சென்னை சைதாப்பேட்டை மாநகராட்சி பள்ளியிலும் முதல்வரின் ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட அந்தநல்லூர் பள்ளியிலும் இந்த திட்டம் அறிமுகமாகிறது. முதல்வர் ஜெயலலிதா இந்த திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
அங்கன்வாடிகளில் திங்கள் கிழமைகளில் தக்காளி சாதம், வேக வைத்த முட்டை செவ்வாய் கிழமைகளில் கலவை சாதம், சுண்டல், புதன் கிழமைகளில் காய்கறி புலவு சாதம், வேக வைத்த முட்டை, வியாழக்கிழமைகளில் எலுமிச்சை சாதம், வேக வைத்த முட்டை, வெள்ளிக்கிழமைகளில் பருப்பு சாதம், வேக வைத்த உருளை கிழங்கு, சனி மற்றும் ஞாயிறுகளில் கலவை சாதம் வழங்கப்படும்.

23/11/12

2013ஆம் ஆண்டு பொது விடுமுறை நாட்கள் அறிவிப்பு

வரும் 2013ம் ஆண்டில் 24 நாட்கள் பொது விடுமுறை நாட்களாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

 • ஆங்கில புத்தாண்டு: ஜன.1 செவ்வாய்
 • பொங்கல்: ஜன.14 திங்கள்
 • திருவள்ளுவர் தினம்: ஜன.15 செவ்வாய்
 • உழவர் திருநாள்: ஜன.16 புதன்
 • மிலாது நபி: ஜன.25 வெள்ளி
 • குடியரசு தினம்: ஜன.26 சனி
 • புனித வெள்ளி: மார்ச் 29 வெள்ளி
 • ஆண்டு வங்கிக்கணக்கு முடிவு (வங்கிகளுக்கு மட்டும்): ஏப்.1 திங்கள்
 • தெலுங்கு புத்தாண்டு: ஏப்.11 வியாழன்
 • தமிழ் புத்தாண்டு/அம்பேத்கர் பிறந்த நாள்: ஏப்.14 ஞாயிறு
 • மகாவீர் ஜெயந்தி: ஏப்.24 புதன்
 • மே தினம்: மே 1 புதன்
 • ரம்ஜான்: ஆக.9 வெள்ளி
 • சுதந்திர தினம்: ஆக.15 வியாழன்
 • கிருஷ்ண ஜெயந்தி: ஆக.28 புதன்
 • விநாயகர் சதுர்த்தி: செப்.9 திங்கள்
 • அரையாண்டு வங்கி கணக்கு முடிவு (வங்கிகளுக்கு மட்டும்): செப்.30 திங்கள்
 • காந்தி ஜெயந்தி: அக்.2 புதன்
 • ஆயுதபூஜை: அக்.13 ஞாயிறு
 • விஜயதசமி: அக்.14 திங்கள்
 • பக்ரீத்: அக்.16 புதன்
 • தீபாவளி: நவ.2 சனி
 • மொகரம்: நவ.14 வியாழன்
 • கிறிஸ்துமஸ்: டிச.25 புதன்

மொத்தம், 24 நாட்கள் விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், இரண்டு நாட்கள் வங்கிகளுக்கு மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளன. வங்கிகள் விடுமுறை, வணிக வங்கிகள், கூட்டுறவு வங்கிளுக்கு மட்டுமே பொருந்தும் எனவும், அரசு தெரிவித்துள்ளது.

தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு 2 நாள் எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழிக்கற்றல் (SABL) பயிற்சி மூன்று கட்டங்களாக நடத்த உத்தரவு - அனைவருக்கும் கல்வி இயக்கம் செயல்முறை

அரையாண்டுத் தேர்வில் மொழிப்பாட தேர்வுக்குப்பின் விடுமுறை அளிக்கும் திட்டம்: அதிகாரி தகவல்- தினமணி

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் 10, 12-வது வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு அரையாண்டுத் தேர்வில் மொழிப்பாட தேர்வுக்கு பின் விடுமுறை அளிக்கவும், அதையடுத்து மற்ற பாடங்களின் தேர்வுகளை நடத்தும் திட்டத்தை செயல்படுத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பி.பகவதி தகவல் தெரிவித்தார்.

இதற்கு முன்பு அரையாண்டு தேர்வு முடிந்ததும் குறிப்பிட்ட நாள்கள் மொத்தமாக விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டுமுதல் 10 மற்றும் 12-வது மாணவ, மாணவிகளுக்கான அரையாண்டுத் தேர்வு வருகிற 19-ம் தேதி தொடங்கி, தொடர்ந்து 22-ம் தேதி வரையில் முதல் கட்டமாக மொழிப்பாட தேர்வுகள் நடைபெற்று வருகிறது. அதற்கு பின்னர் அரையாண்டு விடுமுறை அளிக்கப்படும் திட்டம் நிகழாண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பி.பகவதி கூறியது: இந்த விடுமுறை நாள்களை பயனுள்ளதாக ஒவ்வொரு மாணவ, மாணவியரும் பயன்படுத்த வேண்டும். இந்த நாள்களில் மற்ற பாடங்களை புரிந்து படித்து பயிற்சி பெறமுடியும்.

அதனால் ஒவ்வொரு பாடத்திலும் அதிக மதிப்பெண்கள் எடுப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதையடுத்து, மற்ற பாடங்களின் தேர்வு டிச-2ம் தேதி முதல் நடைபெற இருக்கிறது. மேலும், 6,7,8,9, 11-வது வகுப்புகளுக்கு எப்போதும் போல் பழைய முறையே பின்பற்றப்பட இருப்பதாக பகவதி தெரிவித்தார்

22/11/12

தகுதிதான் அடிப்படை!-தினமணி கட்டுரை

ஆசிரியர் தகுதித் தேர்வு அண்மையில் நடத்தப்பட்டபோது, தேர்வு எழுதியவர்களில் 0.3 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். அப்போது தேர்வு எழுதியவர்கள் பலரும் வினாத்தாள் கடினமாக இருந்தது என்று கருத்துத் தெரிவித்ததால், மீண்டும் ஒருமுறை தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்விலும் சுமார் 3 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இரண்டு முறையும் தேர்ச்சி விகிதம் குறைவு என்பதால் இந்தத் தேர்வு முறை தவறு என்று ஆசிரியர் அமைப்புகள், கூட்டணிகள் சார்பில் கருத்துத் தெரிவிக்கப்பட்டு, தகுதித்தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்படுகிறது.
ஆனால், அவர்கள் முன்வைக்கும் காரணங்கள் அவர்கள் கோரிக்கைக்கு
வலு சேர்ப்பதாக இல்லை.
வினாத்தாள் கடினம் என்பதையே திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருக்க முடியாது. 6 லட்சம் பேர் தேர்வு எழுதும்போது, வினாத்தாள் கடினமாகத்தான் இருக்க முடியும். அதற்காகத்தான் அதை "தகுதித் தேர்வு' என்று அழைக்கிறார்கள்.
இந்த அமைப்புகள் எழுப்பும் இன்னொரு கேள்வி, ஒரு தமிழாசிரியர் பணிக்கு விண்ணப்பிப்பவர் ஏன் மற்ற பாடங்களின் கேள்விக்குப் பதில் எழுத வேண்டும், ஆங்கில ஆசிரியர் பணியேற்கப்போகிறவர் ஏன் தாவரவியல், கணிதம் ஆகிய பாடங்களுக்கான கேள்விகளை எதிர்கொள்ள வேண்டும் என்பதுதான். மேலும், பி.எட். பாடத்திட்டத்திலிருந்து அதிகக் கேள்விகள் இடம்பெறுகின்றன என்ற முணுமுணுப்பும் உண்டு. இதில் எந்தவித நியாயமும் இருப்பதாகத் தெரியவில்லை.
இவர்கள் பணியாற்றப்போவது கல்லூரியில் அல்ல, பள்ளிகளில் பணியாற்றப் போகிறவர்கள். தமிழகத்தின் அரசுப் பள்ளிகளில் 90 சதவீதம் புறநகர்ப் பகுதிகளில் இருப்பவை. பல நடுநிலைப் பள்ளிகளிலும் மேனிலைப் பள்ளிகளிலும் ஒரே ஆசிரியர் இரண்டு பாடங்களை எடுக்க வேண்டிய தேவையும் பொறுப்பும் இருக்கிறது.
மேலும், ஒரு மாணவன் ஓர் ஆசிரியரைத் தனக்குத் தெரியாத அனைத்தும் தெரிந்தவராக மதிக்கிறார். அனைத்துப் பாடங்களிலும் ஆசிரியருக்குத் தேர்ச்சி இல்லாவிட்டாலும், அந்நிலையில் அவர் கேட்கும் கேள்விகளுக்கு, குறைந்தபட்சம் அதற்கான சரியான விடையை எங்கே தேடலாம் என்கின்ற அறிவு படைத்தவராக ஆசிரியர் அமைய வேண்டும். இதுதானே நியாயமான எதிர்பார்ப்பாக இருக்க முடியும்?
அதைக் கருதியே, பல்வேறு பாடங்களில் இருந்தும் அடிப்படைக் கேள்விகள் மட்டுமே கேட்கப்பட்டுள்ளன. இதையும்கூட தவறு என்று சொல்வார்கள் என்றால், அவர்கள் கல்லூரி விரிவுரையாளர்களாகப் பணியாற்ற முயற்சி செய்யலாமே தவிர, பள்ளிகளில் பணியாற்ற வேண்டியதில்லை.
இந்த இரண்டு தகுதித் தேர்வுகளிலும் அப்பட்டமாகத் தெரியவந்துள்ளது என்னவென்றால், வெற்றி பெற்றிருப்போர் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பதுதான். அதாவது, தொடர்ந்து படித்துக்கொண்டும், தனியார் பள்ளிகளில் பாடம் நடத்திக்கொண்டும் இருப்போர் மட்டுமே இந்தத் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். பட்டம் மட்டும் வாங்கிக்கொண்டு வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்துவிட்டு, பதிவுமூப்பு அடிப்படையில் வேலை கிடைத்துவிடும் என்று எதையும் படிக்காமல் சும்மா இருந்தவர்களால் இத்தேர்வில் வெற்றி பெற முடியவில்லை. இதுதான் மிகவும் கசப்பான உண்மை.

இந்த உண்மையை ஏற்கவும், ஆன்ம பரிசோதனை நடத்தவும் முயல வேண்டிய ஆசிரியர் அமைப்புகள், கூட்டணிகள், அதற்கு மாறாக பணம் கொடுத்துதான் இவர்கள் தேர்ச்சி பெற்றார்கள் என்று சொல்வது தங்களைத் தாங்களே தரம் தாழ்த்திக் கொள்வதற்கு ஒப்பாகும். அறிவால் தேர்ச்சி பெற்றவர்களை வெறும் காழ்ப்புணர்ச்சியால் இதைவிடக் கொச்சைப்படுத்தும் செயல் வேறு ஏதும் இருக்க முடியாது.
தகுதித் தேர்வுகள் மிகவும் இன்றியமையாதது என்பதும், குறிப்பாக ஆசிரியர் பணிக்கு அறிவுத்திறன் சோதனை அவசியமானது என்பதும் மேலும்மேலும் உறுதிப்பட்டுக்கொண்டிருக்கிறது. ஆகவே, தமிழக அரசு இத்தகைய அடிப்படையற்ற விமர்சனங்களுக்காக அச்சப்படாமல், தகுதித் தேர்வைத் தொடர்ந்து முறைப்படி, நடத்தவும், அதில் தேர்ச்சி பெறுவோரை மட்டுமே பணியமர்த்தவும் செய்தல் வேண்டும். அதுமட்டுமே அடுத்த தலைமுறைக்கு நல்ல ஆசிரியர்களை வழங்கும் செயலாக இருக்கும்.
மேலும், தற்போதைய ஆசிரியர்கள் எந்த அளவுக்குத் தங்கள் பாடங்களில் ஆழமும் விரிவும் கொண்ட அறிவுப்புலம் பெற்றிருக்கிறார்கள் என்பது இன்றியமையாத கேள்வி. ஒருமுறை பணியில் சேர்ந்துவிட்டால், அந்த ஆசிரியருக்குச் சம்பளம் மட்டுமே வழங்க வேண்டும் என்பது எந்த நாட்டிலும் இல்லாத ஒரு நடைமுறை. ஆகவே, ஆசிரியர்கள் அனைவருக்கும், அவர்கள் பணியில் சேர்ந்த பிறகு, ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை, சுய ஆய்வுத் தேர்வு ஒன்றை நடத்துவது அவசியமாகிறது.
காலத்துக்கு ஏற்ப ஆசிரியர்கள் தங்கள் அறிவை வளர்த்துக்கொண்டிருக்கிறார்களா, இவர்களுக்குத் தாங்கள் நடத்தும் பாடப்புத்தகத்தில் உள்ள விஷயங்களாகிலும் முழுமையாகத் தெரிந்திருக்கிறதா என்பதை அறிந்துகொள்ள இத்தகைய சுய ஆய்வுத் தேர்வு அவசியம். அந்தத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே ஆசிரியர்களாகத் தொடர அனுமதிக்க வேண்டும். இதற்கு ஆசிரியர்கள் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் என்பது உறுதி. ஆனாலும், ஓர் ஆசிரியர் காலத்தால் பின்தங்கிவிட்டு, ஒரு மாணவனுக்கு எப்படி அறிவு புகட்ட முடியும்? தகுதியற்ற ஒருவருக்கு மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வழங்கிக் கொண்டிருப்பது எந்த வகையில் நியாயம்?
ஒரு சாதாரண தொழிலாளிக்கும்கூட புதிய இயந்திரங்களில் பயிற்சி அளித்து அவரைத் தரப்படுத்துகிறார்கள். மருத்துவர்கள், பொறியாளர்கள் தங்கள் துறையின் தொழில்நுட்ப வளர்ச்சியைப் புத்தாக்கப் பயிற்சிகள் மூலம் வளர்த்துக்கொள்கிறார்கள். ஓர் ஆசிரியர் காலத்துக்கேற்ற அறிவுப்புலம் கொண்டிருக்கிறாரா என்பதை அறிய சுயஆய்வுத் தேர்வு நடத்துவதில் என்ன தவறு?

பணி நியமனத்திற்கான பட்டியல் தயாரிக்கும் பணி தீவிரம்


டி.இ.டி., தேர்வில் தேர்வு  பெற்றவர்களில், பணி நியமனத்திற்கு தகுதி வாய்ந்தவர்கள் பட்டியல் தயாரிக்கும் பணி, தீவிரமாக நடந்து வருகிறது.

இறுதி தேர்வுப் பட்டியலில், இடம்பெறும், 22 ஆயிரம் பேருக்கு,  விரைவில் வேலை வழங்கப்பட  உள்ளது. டி.இ.டி.,தேர்வு அடிப் படையில், இடைநிலை, பட்டதாரி  ஆசிரியர், 25 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்படுவர் என, டி.ஆர்.பி.,  அறிவித்தது.

இந்த ஆண்டு,  ஜூலையில் நடந்த முதல் டி.இ.டி., தேர்வில், 2,448 பேரும், அக்டோபரில் நடந்த மறு தேர்வில், 19 ஆயிரம் பேரும், தேர்வு பெற்றனர். ஆசிரியர் நியமன புதிய வழிகாட்டி விதிமுறைகளின்படி, இவர்கள் அனைவருக்கும், சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

தற்போது, இறுதி தேர்வுப் பட்டியல் தயாரிக்கும் பணி, தீவிரமாக நடந்து வருகிறது. இந்தப் பணிகள் இரு நாட்களில் முடிவடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. உரிய சான்றிதழ் இல்லாதவர்கள், பாடத்திற்குரிய  கல்வித்தகுதி இல்லாதவர்கள் குறித்து டி.ஆர்.பி., அதிகாரிகள், கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர்.

பள்ளிகளில், அன்னையர் பள்ளி பார்வை குழு!

"அனைத்து பள்ளிகளிலும், "அன்னையர் பள்ளி பார்வை குழு" ஏற்படுத்தி ஆய்வு செய்ய வேண்டும்" என, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதன்படி பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் அன்னையரை, ஐந்து பேர் கொண்ட குழுவாக அமைக்க வேண்டும். இந்த குழு, வாரம் ஒரு நாள், பள்ளி வேலை நாட்களில் ஆய்வு மேற்கொள்வர். வாரந்தோறும் இக்குழுவினர் மாறிக் கொண்டே இருப்பர். பள்ளியில் வகுப்பறை வசதி உள்ளதா, போதிய ஆசிரியர்கள் உள்ளனரா, நூலகம், குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளனவா என, ஆய்வு செய்வர்.

இதுகுறித்து தலைமையாசிரியரிடம் தகவல் தெரிவிப்பர். அன்னையர் கூறும் குறைகளை, நிவர்த்தி செய்ய வேண்டும். இக்குழுவில், அனைத்து மாணவர்களின் அன்னையரும், இடம்பெற வகை செய்யப்பட்டுள்ளது.

குறைகளை சரி செய்தது குறித்து, முதன்மை கல்வி அலுவலர் மற்றும் பள்ளிக் கல்வித்துறைக்கு இவர்களே தகவல் தெரிவிக்க வேண்டும் என, கூறப்பட்டுள்ளது.

21/11/12

தொடக்கக்கல்வி - 01.06.1988 - முந்தைய / பிந்தைய பணிக்காலத்தை சேர்த்து தொடக்கப்பள்ளி த.ஆ பதவியில் தேர்வுநிலை / சிறப்புநிலை அனுமதித்தல் - கூடுதல் விவரம் கோருதல் சார்பு.

தொடக்கக்கல்வி - 2012-13ஆம் கல்வியாண்டில் கல்வி உதவித் தொகை / பெண் கல்வி ஊக்குவிப்புத் தொகை - பயன்பெறும் SC / ST / / BC / MBC & MINORITY மாணவர்களின் விவரம் சமர்பிக்க உத்தரவு.

தொடக்கக்கல்வி - 6 முதல் 8ஆம் வகுப்பு மாணவர் களுக்கு பருவ சுகாதார வாழ்வியல் திறன் பயிற்சி மாவட்ட வாரியாக 30.11.2012க்குள் அளிக்க தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு.

ஆசிரியர் தகுதித் தேர்வு(TET) - தகுதிதான் அடிப்படை! - தினமணி கட்டுரை

ஆசிரியர் தகுதித் தேர்வு அண்மையில் நடத்தப்பட்டபோது, தேர்வு எழுதியவர்களில் 0.3 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். அப்போது தேர்வு எழுதியவர்கள் பலரும் வினாத்தாள் கடினமாக இருந்தது என்று கருத்துத் தெரிவித்ததால், மீண்டும் ஒருமுறை தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்விலும் சுமார் 3 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இரண்டு முறையும் தேர்ச்சி விகிதம் குறைவு என்பதால் இந்தத் தேர்வு முறை தவறு என்று ஆசிரியர் அமைப்புகள், கூட்டணிகள் சார்பில் கருத்துத் தெரிவிக்கப்பட்டு, தகுதித்தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்படுகிறது.

ஆனால், அவர்கள் முன்வைக்கும் காரணங்கள் அவர்கள் கோரிக்கைக்கு வலு சேர்ப்பதாக இல்லை. வினாத்தாள் கடினம் என்பதையே திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருக்க முடியாது. 6 லட்சம் பேர் தேர்வு எழுதும்போது, வினாத்தாள் கடினமாகத்தான் இருக்க முடியும். அதற்காகத்தான் அதை "தகுதித் தேர்வு' என்று அழைக்கிறார்கள்.

இந்த அமைப்புகள் எழுப்பும் இன்னொரு கேள்வி, ஒரு தமிழாசிரியர் பணிக்கு விண்ணப்பிப்பவர் ஏன் மற்ற பாடங்களின் கேள்விக்குப் பதில் எழுத வேண்டும், ஆங்கில ஆசிரியர் பணியேற்கப்போகிறவர் ஏன் தாவரவியல், கணிதம் ஆகிய பாடங்களுக்கான கேள்விகளை எதிர்கொள்ள வேண்டும் என்பதுதான். மேலும், பி.எட். பாடத்திட்டத்திலிருந்து அதிகக் கேள்விகள் இடம்பெறுகின்றன என்ற முணுமுணுப்பும் உண்டு. இதில் எந்தவித நியாயமும் இருப்பதாகத் தெரியவில்லை.

இவர்கள் பணியாற்றப்போவது கல்லூரியில் அல்ல, பள்ளிகளில் பணியாற்றப் போகிறவர்கள். தமிழகத்தின் அரசுப் பள்ளிகளில் 90 சதவீதம் புறநகர்ப் பகுதிகளில் இருப்பவை. பல நடுநிலைப் பள்ளிகளிலும் மேனிலைப் பள்ளிகளிலும் ஒரே ஆசிரியர் இரண்டு பாடங்களை எடுக்க வேண்டிய தேவையும் பொறுப்பும் இருக்கிறது.

மேலும், ஒரு மாணவன் ஓர் ஆசிரியரைத் தனக்குத் தெரியாத அனைத்தும் தெரிந்தவராக மதிக்கிறார். அனைத்துப் பாடங்களிலும் ஆசிரியருக்குத் தேர்ச்சி இல்லாவிட்டாலும், அந்நிலையில் அவர் கேட்கும் கேள்விகளுக்கு, குறைந்தபட்சம் அதற்கான சரியான விடையை எங்கே தேடலாம் என்கின்ற அறிவு படைத்தவராக ஆசிரியர் அமைய வேண்டும். இதுதானே நியாயமான எதிர்பார்ப்பாக இருக்க முடியும்?

அதைக் கருதியே, பல்வேறு பாடங்களில் இருந்தும் அடிப்படைக் கேள்விகள் மட்டுமே கேட்கப்பட்டுள்ளன. இதையும்கூட தவறு என்று சொல்வார்கள் என்றால், அவர்கள் கல்லூரி விரிவுரையாளர்களாகப் பணியாற்ற முயற்சி செய்யலாமே தவிர, பள்ளிகளில் பணியாற்ற வேண்டியதில்லை.

இந்த இரண்டு தகுதித் தேர்வுகளிலும் அப்பட்டமாகத் தெரியவந்துள்ளது என்னவென்றால், வெற்றி பெற்றிருப்போர் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பதுதான். அதாவது, தொடர்ந்து படித்துக்கொண்டும், தனியார் பள்ளிகளில் பாடம் நடத்திக்கொண்டும் இருப்போர் மட்டுமே இந்தத் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். பட்டம் மட்டும் வாங்கிக்கொண்டு வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்துவிட்டு, பதிவுமூப்பு அடிப்படையில் வேலை கிடைத்துவிடும் என்று எதையும் படிக்காமல் சும்மா இருந்தவர்களால் இத்தேர்வில் வெற்றி பெற முடியவில்லை. இதுதான் மிகவும் கசப்பான உண்மை.

இந்த உண்மையை ஏற்கவும், ஆன்ம பரிசோதனை நடத்தவும் முயல வேண்டிய ஆசிரியர் அமைப்புகள், கூட்டணிகள், அதற்கு மாறாக பணம் கொடுத்துதான் இவர்கள் தேர்ச்சி பெற்றார்கள் என்று சொல்வது தங்களைத் தாங்களே தரம் தாழ்த்திக் கொள்வதற்கு ஒப்பாகும். அறிவால் தேர்ச்சி பெற்றவர்களை வெறும் காழ்ப்புணர்ச்சியால் இதைவிடக் கொச்சைப்படுத்தும் செயல் வேறு ஏதும் இருக்க முடியாது.

தகுதித் தேர்வுகள் மிகவும் இன்றியமையாதது என்பதும், குறிப்பாக ஆசிரியர் பணிக்கு அறிவுத்திறன் சோதனை அவசியமானது என்பதும் மேலும்மேலும் உறுதிப்பட்டுக்கொண்டிருக்கிறது. ஆகவே, தமிழக அரசு இத்தகைய அடிப்படையற்ற விமர்சனங்களுக்காக அச்சப்படாமல், தகுதித் தேர்வைத் தொடர்ந்து முறைப்படி, நடத்தவும், அதில் தேர்ச்சி பெறுவோரை மட்டுமே பணியமர்த்தவும் செய்தல் வேண்டும். அதுமட்டுமே அடுத்த தலைமுறைக்கு நல்ல ஆசிரியர்களை வழங்கும் செயலாக இருக்கும்.

மேலும், தற்போதைய ஆசிரியர்கள் எந்த அளவுக்குத் தங்கள் பாடங்களில் ஆழமும் விரிவும் கொண்ட அறிவுப்புலம் பெற்றிருக்கிறார்கள் என்பது இன்றியமையாத கேள்வி. ஒருமுறை பணியில் சேர்ந்துவிட்டால், அந்த ஆசிரியருக்குச் சம்பளம் மட்டுமே வழங்க வேண்டும் என்பது எந்த நாட்டிலும் இல்லாத ஒரு நடைமுறை. ஆகவே, ஆசிரியர்கள் அனைவருக்கும், அவர்கள் பணியில் சேர்ந்த பிறகு, ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை, சுய ஆய்வுத் தேர்வு ஒன்றை நடத்துவது அவசியமாகிறது.

காலத்துக்கு ஏற்ப ஆசிரியர்கள் தங்கள் அறிவை வளர்த்துக்கொண்டிருக்கிறார்களா, இவர்களுக்குத் தாங்கள் நடத்தும் பாடப்புத்தகத்தில் உள்ள விஷயங்களாகிலும் முழுமையாகத் தெரிந்திருக்கிறதா என்பதை அறிந்துகொள்ள இத்தகைய சுய ஆய்வுத் தேர்வு அவசியம். அந்தத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே ஆசிரியர்களாகத் தொடர அனுமதிக்க வேண்டும். இதற்கு ஆசிரியர்கள் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் என்பது உறுதி. ஆனாலும், ஓர் ஆசிரியர் காலத்தால் பின்தங்கிவிட்டு, ஒரு மாணவனுக்கு எப்படி அறிவு புகட்ட முடியும்? தகுதியற்ற ஒருவருக்கு மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வழங்கிக் கொண்டிருப்பது எந்த வகையில் நியாயம்?

ஒரு சாதாரண தொழிலாளிக்கும்கூட புதிய இயந்திரங்களில் பயிற்சி அளித்து அவரைத் தரப்படுத்துகிறார்கள். மருத்துவர்கள், பொறியாளர்கள் தங்கள் துறையின் தொழில்நுட்ப வளர்ச்சியைப் புத்தாக்கப் பயிற்சிகள் மூலம் வளர்த்துக்கொள்கிறார்கள். ஓர் ஆசிரியர் காலத்துக்கேற்ற அறிவுப்புலம் கொண்டிருக்கிறாரா என்பதை அறிய சுயஆய்வுத் தேர்வு நடத்துவதில் என்ன தவறு?

அரசு விடுமுறை நாட்கள் - 2013

பள்ளிகளில் அடிப்படை வசதிகள் இல்லையா களம் இறங்க வருகின்றனர் "அன்னையர் குழு'

பள்ளிகளை மாணவ, மாணவியரின் தாய்மார்கள் நேரடியாக ஆய்வு செய்யும் வகையில் ஒவ்வொரு பள்ளிகளிலும் "அன்னையர் குழு' என்ற புதிய அமைப்பு ஏற்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் 34 ஆயிரத்து 180 தொடக்கப்பள்ளிகளும், ஒன்பதாயிரத்து 938 நடுநிலைப்பள்ளிகளும், நான்காயிரத்து 574 உயர்நிலைப்பள்ளிகளும், ஐந்தாயிரத்து 930 மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம்
54 ஆயிரத்து 622 பள்ளிகள் உள்ளன. பல லட்சம் மாணவ, மாணவியர் இப்பள்ளிகளில் பயின்று வருகின்றனர்.அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் செயல்பாடுகளை கண்காணிக்கவும், ஆய்வு செய்யவும் உதவி தொடக்கக்கல்வி அதிகாரிகள், மாவட்ட தொடக்கக்கல்வி அதிகாரிகள், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் என்று கல்வித்துறை அதிகாரிகள் உள்ளனர். இவர்கள் தவிர பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகளும் பள்ளி செயல்பாடுகளை அவ்வப்போது ஆய்வு செய்வர்.இந்நிலையில் பள்ளிகளை அங்கு படிக்கும் மாணவ, மாணவியரின் தாய்மார்கள் ஆய்வு செய்யும் வகையில் "அன்னையர் குழு' என்ற புதிய அமைப்பை ஏற்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வகுப்புகளை ஐந்து வகையாக பிரித்து ஒவ்வொரு பரிவில் இருந்தும் ஒருவர் வீதம் ஐந்து தாய்மார்கள் இந்த குழுவில் இடம் பெற்றிருப்பர்.

அதன்படி ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் தாய்மார்களில் ஒருவரும், 4ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் தாய்மார்களில் ஒருவரும், 6ம் வகுப்பு முதல் எஸ்.எஸ்.எல்.சி., வரை படிக்கும் மாணவர்களின் தாய்மார்களில் ஒருவரும், பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவர்களின் தாய்மார்களில் ஒருவரும் பிரதிநிதியாக இருப்பர். இவர்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.இக்குழு வாரத்தில் ஒரு நாள் பள்ளியில் உள்ள இருக்கை வசதி, குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, நூலகம், கம்ப்யூட்டர் வசதி, மைதானம் என அனைத்து வசதிகளையும் பார்வையிட்டு அதற்கான பார்வை புத்தகத்தில் விவரங்களை பதிவு செய்வர். அன்னையர் குழுவினர் பார்வையிட்டு குறிப்பு புத்தகத்தில் குறிப்பிடும் குறைபாடுகளை சரிசெய்ய பள்ளி தலைமையாசிரியர், செயலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.நடவடிக்கை விபரங்களை பார்வை புத்தகத்தில் பதிவு செய்து அவர்கள் கையொப்பம் இடவேண்டும். இக்குழுவினர் பள்ளியை பார்வையிடும் போது பள்ளி தலைமையாசிரியரோ அல்லது அவரது பிரதிநிதியோ உடன் இருக்கலாம். இவ்வாறு அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர்.

அரசு செய்திகள் "இன்டர்நெட்' மூலம் தெரிவிக்க ஏற்பாடு

அரசு செய்திகள், திட்டங்கள் குறித்து இன்டர்நெட் மூலம் உடனுக்குடன் பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வகையில் நெல்லையில் 4 மாவட்ட அளவில் செய்தி மக்கள் தொடர்பு துறை அதிகாரிகளுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்கப்பட்டது.தமிழகத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் அரசு செய்திகள் உடனுக்குடன் பொதுமக்களுக்கு கொண்டு செல்லும் வகையில் பல்வேறு
நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.அரசுக்கும், பொதுமக்களுக்கும் இடையே பாலமாக செயல்பட்டு அரசு திட்டங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் செய்தி மக்கள் தொடர்பு துறை அதிகாரிகளுக்கு அடிக்கடி பயிற்சிகள், கூட்டங்கள் நடத்தப்படுகிறது.

தற்போது கம்ப்யூட்டர் தொழில் நுட்பத்தின் மூலம் இன்டர்நெட் உதவியுடன் அரசு செய்திகள் பொதுமக்களுக்கு கொண்டு செல்லும் வகையில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் மூலம் தனி வெப்சைட் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.ஒவ்வொரு மாவட்ட அளவில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறையின் மூலம் அரசு செய்திகள், திட்டங்கள் இன்டர்நெட் மூலம் பத்திரிக்கைகளுக்கு அனுப்பபடுகிறது. இந்த சேவையை மேம்படுத்தும் வகையில் பி.ஆர்.ஓக்கள், ஏ.பி.ஆர்.ஓக்கள், கணக்கர்கள் மற்றும் அலுவலர்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.
நெல்லை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் நேற்று நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் ஆகிய 4 மாவட்டங்கள் அளவிலான செய்தி மக்கள் தொடர்பு துறை அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டன.இதில் பி.ஆர்.ஓக்கள் மதிமாறன் (நெல்லை), தமிழ் இனியன் (தூத்துக்குடி), மாரியப்பன் (விருதுநகர்), ஏ.பி.ஆர்.ஓக்கள் நவாஸ்கான், ஜெகவீரபாண்டியன், கதிரவன், தங்கவேலு, குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.இதில் சென்னை திரைப்பட பிரிவு இன்ஜினியர் முருக பூபதி, சென்னை தொழில் நுட்ப அலுவலர் இன்ஜினியர் யோகேஷ் ஆகியோர் பயிற்சி அளித்தனர். கம்ப்யூட்டர்களை பயன்படுத்தும் விதம், டவுன் லோடு, அப்லோடு, செய்திகள், படங்கள் அனுப்பும் விதம், இன்டர்நெட் பயன்பாடு, போட்டோ ஸ்கேனிங் உட்பட பல்வேறு கருத்துக்கள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டன.

ஏ.இ.இ.ஓ.,க்கள் மூலமே கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும்: முதன்மை கல்வி அலுவலர்

" ஏ.இ.இ.ஓ., மூலமே, பள்ளி மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும்' என, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குமார் கூறினார்.
அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி மேலாண் குழு பயிற்சி குறித்த ஆயத்த முகாம், மாவட்ட திட்ட அலுவலகத்தில் நடந்தது. கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் கோபிதாஸ்
தலைமை வகித்தார். உதவி திட்ட அலுவலர் அல்லிமுத்து வரவேற்றார். மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அருள்மொழிதேவி விளக்கி பேசினார்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குமார், முகாமை துவக்கி வைத்து பேசியதாவது:
பள்ளி மேம்பாட்டுக்கு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுப்பது குறித்து, மேலாண் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சி பயனுள்ளதாக இருந்தால் மட்டுமே, பள்ளி வளர்ச்சி பெறும். பயிற்சியில் கூறக்கூடிய கருத்துக்களை நன்றாக தெரிந்து கொண்டு, உறுப்பினர்களுக்கு புரியும் வகையில், பயிற்சியாளரை தயார் படுத்த வேண்டும்.
பள்ளி மேலாண் குழு உறுப்பினர்களுக்கு புரியும் வகையில், பயிற்சி அளிப்பது குறித்து ஏற்கனவே திட்டமிட்டு அதன்படி பயிற்சி சிறப்பாகவும், பயனுள்ளதாகவும் அளிக்க வேண்டும். பயிற்சியை கடமைக்காக இல்லாமல், பயனுள்ளதாக மாற்ற வேண்டும்.
அரசு பள்ளிகளில் உள்ள பழுதான மற்றும் பாழடைந்த கட்டிடங்கள், வகுப்பறைகள் ஆகியவற்றை கண்டறிந்து, அக்கட்டிடம் யாரால், எப்போது கட்டப்பட்டது என்பன போன்ற விபரங்களை, அனைத்து தொடக்கக் கல்வி அலுவலர்கள் சேகரித்து அறிக்கை வழங்க வேண்டும். ஏ.இ.இ.ஓ., மூலமே, பள்ளி மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகையை வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
மாவட்டத்தில் உள்ள வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள், தொடக்கக் கல்வி அலுவலர்கள் உள்பட, 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

19/11/12

ஆசிரியர் தகுதி மறுதேர்வில் வெற்றி பெற்றவர்களின் இறுதி தேர்வுப் பட்டியல், ஒரு வாரத்துக்குள் வெளியிடப்படும் .

ஆசிரியர் தகுதி மறுதேர்வில் வெற்றி பெற்றவர்களின் இறுதி தேர்வுப் பட்டியல், ஒரு வாரத்துக்குள் வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆசிரியர் தகுதி மறுதேர்வு அக்டோபர் 14ஆம் தேதி நடைபெற்றது. மொத்தம் 6.56 லட்சம் பேர் பங்கேற்ற இந்தத் தேர்வில், 19,246 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இதில், தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நவம்பர் 6,7,8,9 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இந்த சான்றிதழ் சரிபார்ப்புகளில் உரிய தகுதியுடையவர்களின் விவரங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து, இறுதித் தேர்வுப் பட்டியல் ஒரு வார காலத்துக்குள் வெளியிடப்பட உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
ஆசிரியர் தகுதித் தேர்வு மூலம் 20,525 பட்டதாரி ஆசிரியர்களும், 7,500 இடைநிலை ஆசிரியர்களும் தேர்வு செய்யப்பட இருந்தனர். ஆனால், கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வில் 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இதையடுத்து, ஆசிரியர் தகுதி மறுதேர்வு அக்டோபர் 14ஆம் தேதி நடத்தப்பட்டது. இடைநிலை ஆசிரியர்கள் மாநில பதிவு மூப்பின் அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையிலும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

வந்தாச்சுங்கோ !!!! ஆர்டர் !!!!!23.08.2010 ந் தேதிக்குபின் நிதியுதவி பள்ளிகளில் நியமனம் செய்யப்பட்ட விவரங்கள் அனுப்பியே ஆகவேண்டும்!!!

ஆசிரியர் பணி நியமனத்தில் முறைகேடு? மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர், நேர்முக உதவியாளர் பணியிடை நீக்கம் - dinamani

நாகை மாவட்டத்தில், ஆசிரியர் பணி நியமனத்தில் எழுந்த முறைகேடு புகாரைத் தொடர்ந்து அம் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் எஸ். மார்த்தாள் பிரபாவதி, அவரது நேர்முக உதவியாளர் வை. திருவள்ளுவன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத 5 பேரை பணி நியமனம் செய்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் எஸ். மார்த்தாள் பிரபாவதி உத்தரவிட்டார். பணியேற்ற 5 பேரில் 2 பேர் முழு ஊதியம் பெற்றுள்ளனர். 3 பேரின் ஊதியம், உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களின் ஆட்சேபனையால் இதுவரை வழங்கப்படவில்லை. கடந்த வியாழக்கிழமை சென்னையில் பள்ளிக் கல்வித் துறை செயலாளர் தலைமையில் அனைத்து மாவட்ட கல்வித் துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதில், நாகை உள்பட சில மாவட்டங்களில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களும் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இந் நிலையில், நாகை மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் எஸ். மார்த்தாள் பிரபாவதி வெள்ளிக்கிழமையும், அவரது நேர்முக உதவியாளர் வை. திருவள்ளுவனை சனிக்கிழமையும் பணியிடை நீக்கம் செய்து பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

18/11/12

நர்சரி பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க புதிய வழிகாட்டு விதிமுறை

குழந்தைகளை நர்சரி பள்ளிகளில் சேர்க்க புதிய வழிகாட்டு விதிமுறைகளை ஒவ்வொரு பள்ளியும் அறிவிக்க வேண்டும் என்று மாநில கல்வி இயக்குனர் தெரிவித்தார்.இதுபற்றி நிருபர்களிடம் மாநில கல்வி இயக்குனர் அமித் சிங்லா கூறியதாவது:நர்சரி
வகுப்புக்களில் குழந்தைகளை சேர்ப்பதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன. அதை கருத்தில் கொண்டு ஒவ்வொரு பள்ளியும் நர்சரி வகுப்பில் குழந்தைகளை சேர்ப்பதற்கான புதிய வழிகாட்டு விதிமுறைகளை அறிவிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 3 அல்லது 4 ஆண்டுகளாக இதில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வந்தாலும் இன்னும் நர்சரி வகுப்பில் குழந்தைகளை சேர்ப்பதில் இருக்கும் அவலம் தீரவில்லை. கடந்தகால அனுபவங்களையெல்லாம் கருத்தில் கொண்டுதான் புதிய வழிகாட்டு விதிமுறைகளை தயாரிக்க பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இப்போதுள்ள வழிகாட்டு விதிமுறையில் எல்லா மாணவர்களுக்கும் இடமளிக்க வேண்டும் என்று இருக்கிறது. மேலும் நர்சரி மாணவர் சேர்க்கையில் எவ்வித வேறுபாடும் காட்டக் கூடாது என்றும் விதியுள்ளது. எனவே புதிய வழிகாட்டு விதிமுறையில் பெரிய மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. இப்போதுள்ள வழிகாட்டு விதிமுறையின்படி பள்ளிகளுக்கு மாணவர் சேர்க்கையில் சுயாட்சி தன்மை வழங்கப்பட்டுள்ளது.மேலும் இந்த நர்சரி மாணவர் சேர்க்கையில் பல்கலைக்கழகங்களில் இருக்கும் மாணவர் சேர்க்கை போன்ற ஒரே மாதிரியான வழிகாட்டு விதிமுறைகளை கடைபிடிக்கலாம் என்று சிலர் தெரிவிக்கின்றனர்.

ஆனால் பல்கலைக்கழகங்களின் கீழ் செயல்படும் கல்லூரிகள், மாநில அரசின் நிதி உதவியை பெறுகின்றன. அதனால் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கைகாக ஒரே மாதிரியான வழிகாட்டு முறையை எளிதில் கையாள முடியும். ஆனால் மாநிலம் முழுவதும் உள்ள எல்லா நர்சரி பள்ளிகளும் அரசு உதவியுடன் இயங்குபவை அல்ல. எனவே இதில் ஒரே மாதிரியான வழிகாட்டு முறையை மாநில முழுவதற்கும் அமல்படுத்த முடியாது. சில பள்ளிகள் மத்திய அரசு கல்வி திட்டத்தின் கீழ் இணைந்து செயல்படுகின்றன. சில பள்ளிகள் தனியாரால் நடத்தப்படுகின்றன. மேலும் பல பள்ளிகள் சுயாட்சி அதிகாரம் பெற்றவை. எனவே எல்லா பள்ளிகளையும் ஒரே விதியின் கீழ் கட்டுப்படுத்த இயலாது.எனவேதான் ஒவ்வொரு பள்ளியும் தனக்கென்று சில விதிமுறைகளை ஏற்படுத்திக் கொண்டு அதன் அடிப்படையில் செயல்பட்டு வருகின்றன. அதன்படி சில பள்ளிகள் சைவ உணவு சாப்பிடும் மாணவர்களை மட்டுமே சேர்த்துக் கொள்கின்றன. கடந்த ஆண்டு வழிகாட்டு விதிமுறையின்படி நர்சரி வகுப்புக்களில் குழந்தைகளை சேர்க்க குறைந்த பட்சம் அந்த குழந்தைக்கு 3 வயதுக்கு மேல் ஆகி இருக்க வேண்டும்.ஆனால் சில பள்ளிகள் 4 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை கூட நர்சரி வகுப்பில் சேர்த்துக்கொள்கின்றன. இப்படி நர்சரி வகுப்பில் மானவர்களை சேர்த்துக் கொள்வதற்கு வயது உச்ச வரம்பு எதுவும் கிடையாது.இதுபற்றியெல்லாம் ஆராய்ந்து புதிய வழிகாட்டு விதிமுறைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.இவ்வாறு அமித் சிங்லா கூறினார்.

பி.எட்., எம்.எட்., படிப்புகளில் சேர நுழைவுத்தேர்வு

பி.எட்., - எம்.எட்., உள்ளிட்ட, ஆசிரியர் கல்வி படிப்பு சேர்க்கைக்கு, நுழைவுத்தேர்வு முறையை அமல்படுத்த, மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது.
நீதிபதி வர்மா குழு அளித்த பரிந்துரை அறிக்கையின் அடிப்படையில், இந்த முடிவை எடுத்துள்ளது. இந்த பரிந்துரைக்கு, கல்விக்கான மத்திய ஆலோசனை வாரிய கூட்டத்தில், ஒப்புதலும் வழங்கப்பட்டுள்ளது.

வர்மா குழு
நாடு முழுவதும், ஆசிரியர் கல்வியில் கொண்டு வர வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்தும், தரமான ஆசிரியரை தேர்வு செய்வதற்கான வழிமுறைகள் குறித்தும் ஆய்வு செய்து, பரிந்துரை அறிக்கை வழங்க, சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி வர்மா தலைமையில் குழு அமைத்து, மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. வர்மா குழு, சமீபத்தில், தன் பரிந்துரையை, மத்திய அரசிடம் சமர்ப்பித்தது.

பரிந்துரையில், "தரமான கல்வியை அளிக்க வேண்டும் எனில், தரமான ஆசிரியரை நியமனம் செய்ய வேண்டும். அதற்கு, பி.எட்., - எம்.எட்., மற்றும் ஆசிரியர் கல்வி பட்டய படிப்பு ஆகிய ஆசிரியர் கல்வி படிப்பு சேர்க்கையில், நுழைவுத் தேர்வு முறையை அமல்படுத்த வேண்டும்" என, தெரிவிக்கப்பட்டிருந்தது.
தமிழகத்தில் நடந்த, முதல், டி.இ.டி., தேர்வை, கிட்டத்தட்ட, ஏழு லட்சம் பேர் எழுதிய போதும், 1 சதவீதத்திற்கும் குறைவாக, வெறும், 2,448 பேர் மட்டுமே தேர்வு பெற்றதை, வர்மா குழு சுட்டிக் காட்டி, நுழைவுத் தேர்வின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளது.

தமிழகத்தின் நிலைப்பாடு: வர்மா குழுவின் பரிந்துரை அறிக்கை, சமீபத்தில், டில்லியில் நடந்த கல்விக்கான மத்திய ஆலோசனை வாரிய கூட்டத்தில் வைக்கப்பட்டு, வாரியத்தின் ஒப்புதலும் பெறப்பட்டது. கூட்டத்தில், பல்வேறு மாநில பிரதிநிதிகள், ஆசிரியர் கல்விக்கான நுழைவுத் தேர்வு திட்டத்தை ஆதரித்துள்ளனர். ஆனால், இந்தவிவகாரத்தில், தமிழக அரசின் நிலைப்பாடு தெரியவில்லை.

30 ஆயிரம் மாணவர்கள்
தமிழகத்தில், 700 ஆசிரியர் கல்வி கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில், ஆண்டுதோறும், 40 ஆயிரம் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். ஆசிரியர் கல்வி பட்டயத் தேர்வு படிப்புகளில், 30 ஆயிரம் பேர் வரை சேர்கின்றனர். இந்த படிப்புகளின் சேர்க்கைக்கு, தற்போது நுழைவுத்தேர்வு கிடையாது.
ஆசிரியர் கல்வி பட்டயத் தேர்வு விண்ணப்பதாரர்கள், பட்டப் படிப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகளில் பெற்ற மதிப்பெண் மற்றும் இன சுழற்சி அடிப்படையில், தேர்வுப் பட்டியலை வெளியிட்டு, கலந்தாய்வு அடிப்படையில் சேர்க்கை நடத்தப்படுகிறது.

எப்போது வெளியாகும்?
இந்த முறையால், தரமான ஆசிரியரை தேர்வு செய்ய முடியாது என்பதை, டி.இ.டி., தேர்வு, வெட்ட வெளிச்சமாக்கி விட்டது. எனவே, நுழைவுத் தேர்வு முறையை அமல்படுத்தும் மத்திய அரசின் முடிவுக்கு ஆதரவு தெரிவிப்பது குறித்து, உயர்கல்வித் துறை தீவிரமாக ஆலோசித்து வருவதாக, உயர்கல்வி வட்டாரங்கள் தெரிவித்தன. தமிழக அரசின் நிலைப்பாடு குறித்த அறிவிப்பு, அடுத்த கல்வியாண்டு சேர்க்கைக்கு முன்னதாக வெளியாகலாம் என திர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து, பல்கலைக்கழக ஆசிரியர் சங்க பொதுச் செயலர் பிச்சாண்டி கூறியதாவது: கலை, அறிவியல் பட்டதாரிகள் மட்டுமே, பி.எட்., - எம்.எட்., படிப்புகளில் ஆர்வம் காட்டுகின்றனர். நுழைவுத் தேர்வு திட்டத்தை அமல்படுத்துவதற்கு முன், கல்லூரி பாடத் திட்டங்களின் தரத்தை உயர்த்த வேண்டும்.  இல்லை எனில், நகரங்களைச் சேர்ந்த மாணவர்கள் மட்டுமே, ஆசிரியர் கல்விக்கான நுழைவுத் தேர்வில் வெற்றி பெறுவர். கிராமப்புற பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களின் நிலை, கேள்விக்குறி ஆகிவிடும். வ்வாறு பிச்சாண்டி தெரிவித்தார்.

17/11/12

அரசு பள்ளிகளில் 5,000 ஆய்வக உதவியாளர்கள் விரைவில் தேர்வு

அரசு பள்ளிகளில், 5,000 ஆய்வக உதவியாளர்கள், வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு அடிப்படையில், விரைவில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
தரம் உயர்த்தப்பட்ட அரசு உயர்நிலைப் பள்ளிகளில், 544 ஆய்வக உதவியாளர் பணியிடமும், காலியாக உள்ள, 4,393 ஆய்வக உதவியாளர் பணியிடங்களையும் நிரப்ப, இம்மாதம், 11ம் தேதி, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.
 அமைச்சுப் பணியாளர்கள் நியமனம் மட்டுமே, தேர்வாணைய வரம்பிற்குள் வருவர். ஆய்வக உதவியாளர் பணி நியமனம், பொது சார்புப் பணிகளின் கீழ் வரும். எனவே, இந்த வகை பணி நியமனங்கள், வேலைவாய்ப்பு பதிவுமூப்பு அடிப்படையில்தான் நடக்கும். கல்வித்துறையில் பணியாற்றும் கடைநிலை ஊழியர்களில், கல்வித்தகுதி வாய்ந்தவர்கள் இருந்தால், அவர்களுக்கு முதலில், ஆய்வக உதவியாளர் பதவி உயர்வு வழங்கப்படும்.
மீதமுள்ள பணியிடங்கள், அந்தந்த மாவட்டங்களில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு ஏற்ப, மாவட்ட அளவிலான பதிவுமூப்பு அடிப்படையில், தகுதி வாய்ந்தவர்கள் தேர்வு செய்யப்பட்டு, பணி நியமனம் செய்யப்படுவர். இவ்வாறு, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவது குறித்த முதல்வரின் அறிவிப்பை, தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை ஆய்வுக்கூட உதவியாளர் சங்கம் வரவேற்றுள்ளது.

புதிய உணவு வகைகளை சமைப்பதற்கான பயிற்சி

பள்ளிகள், அங்கன்வாடி சத்துணவில், பலவகை உணவு வகைகளை சமைப்பது குறித்த பயிற்சி, சத்துணவு சமையலர்கள், உதவியாளர்களுக்கு அளிக்கப்படுகிறது.

30 ஆண்டுகளுக்கும் மேலாக, ஒரே மாதிரியான உணவுத்திட்டம் செயல்படுத்தப் பட்டு வருகிறது. குழந்தைகளிடத்தில் தற்போது உணவுப் பழக்க வழக்கம் மாறியுள்ளது. இதனால், சத்துணவுத் திட்டத்தில் சாப்பிடும் குழந்தைகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது.

இடை நிற்றல் மற்றும் ஊட்டச்சத்து குறைவு அதிகரித்ததாக அரசுக்கு தகவல் கிடைத்தது. இதை மாற்றும் முயற்சியாக, பள்ளிகளில், குழந்தைகள் விரும்பி சாப்பிடும், பல வகை உணவுகளை அளிக்க அரசு முடிவெடுத்தது. 

சென்னையில், தாமு உள்ளிட்ட, சில பிரபல சமையல் வல்லுனர்கள், ஊட்டச்சத்து நிபுணர்களின் ஆலோசனையுடன், புதிய உணவுகளை, சத்து குறையாமல் தயாரித்து வழங்க திட்டமிடப்பட்டது. சென்னை சைதாப்பேட்டை மற்றும் திருச்சி, ஸ்ரீரங்கம் தொகுதியில் உள்ள ஒரு பள்ளியிலும், சோதனை ரீதியாக இந்த திட்டம் அமல்படுத்தப் பட்டது.

அப்போது, பலவகை சாதங்களை குழந்தைகள் விரும்பி சாப்பிட்டது கண்டறியப் பட்டது. இதையடுத்து, ஊட்டச்சத்து மிகுந்ததாக, அந்த சாதங்களை தருவது தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டு, இத்திட்டத்தை, இம்மாதம் 2ம் தேதி, சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இதன்படி, 13 சாத வகைகள், மசாலா, மிளகுத்தூள் முட்டை என, நான்கு முட்டை உணவு வகைகள், உருளைக்கிழங்கு பொரியல் உள்ளிட்டவை, வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். 

வாரந்தோறும் மாறும் இந்த உணவு வகைகள், சோதனை அடிப்படையில், மாவட்டத்திற்கு ஒரு பகுதியில் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதற்கு முதல்கட்டமாக, சத்துணவு திட்ட சமையலர், அங்கன்வாடி ஊழியர்களுக்கு, பல வகை உணவு சமைப்பது குறித்து பயிற்சியளிக்க சத்துணவுத் திட்டத்துறை முடிவெடுத்துள்ளது.

இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது: தற்போது, சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர், சமையல் உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. இப்பணி விரைவில் முடிந்து விடும். மாவட்டம் தோறும் பணியாளர்கள் பற்றாக்குறை இல்லாத பகுதியை தேர்வு செய்து, அதில் உள்ள சமையலர்கள், உதவியாளர்கள், சத்துணவு அமைப்பாளர்களுக்கு, பலவகை உணவு சமைத்தல், அதில் சேர்க்க வேண்டிய பொருட்களின் அளவு குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதில், கடைகளில் கிடைக்கும், "ரெடிமேட்" பொடி வகைகளை பயன்படுத்தக் கூடாது என்றும், புளியோதரைக்கு தேவையான புளிக்காய்ச்சல், அன்றாடம் தயாரிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சமையலர்களுக்கான பயிற்சி விரைவில் துவங்க உள்ளது. தொடர்ந்து, பலவகை உணவுகள் மாணவர்களுக்கும், அங்கன்வாடி குழந்தைகளுக்கும் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

‘உங்க வீட்டுக்கு மேல ஐஎஸ்எஸ் பறக்குது’ : எஸ்எம்எஸ் அனுப்புது நாசா

சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையம் எங்கு பறக்கிறது என்று எஸ்எம்எஸ் மூலம் மக்களுக்கு தெரிவிக்கும் சேவையை நாசா தொடங்கியுள்ளது. அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் மற்றும் ரஷ்யா, ஜப்பான், கனடா, ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் விண்ணில் செலுத்தப்பட்டு வெற்றிகரமாக இயங்கி
வருகிறது ‘ஐஎஸ்எஸ்’ சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையம். இதில் இந்திய வம்சாவளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் உள்பட 6 பேர் தங்கியிருந்து தற்போது ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ராக்கெட்களை நிலைநிறுத்தும் தளம், ஆய்வுக் கருவிகள், விஞ்ஞானிகள் தங்கி ஆய்வு நடத்தும் பகுதி என மொத்தம் 450 டன் எடை கொண்ட ஐஎஸ்எஸ், பூமியில் இருந்து சராசரியாக 370 கி.மீ. உயரத்தில் பறந்தபடி பூமியை தினமும் 15 முறை சுற்றி வருகிறது.

சூரியன், சந்திரனுக்கு அடுத்தபடியாக வானில் பளிச்சென்று தெரியும் பொருள் என்பதால், அதிகாலை மற்றும் மாலை நேரத்தில் டெலஸ்கோப் உதவியின்றி வெறும் கண்ணாலேயே ஐஎஸ்எஸ்-ஐ பார்க்கலாம் என்று நாசா கூறியுள்ளது. அதை பார்க்க விரும்புபவர்களின் வசதிக்காக புதிய எஸ்எம்எஸ் சேவையை நாசா தொடங்கியுள்ளது. அதாவது, ஐஎஸ்எஸ் பறந்துவரும் பகுதியில் உள்ளவர்களுக்கு ‘உங்கள் வீட்டின் மீது ஐஎஸ்எஸ் பறக்கிறது’ என்று நாசா எஸ்எம்எஸ் அனுப்புகிறது. ஐஎஸ்எஸ் செயல்பட தொடங்கி 12 ஆண்டுகள் ஆவதை குறிக்கும் வகையிலும், மக்களுக்கு ஐஎஸ்எஸ் மற்றும் விண்வெளி ஆராய்ச்சி மீதான ஆர்வத்தை அதிகரிக்கும் வகையிலும் இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளதாக நாசா இணை நிர்வாகி வில்லியம் கெர்ஸ்டன்மயர் தெரிவித்துள்ளார்.

16/11/12

இந்த ஆண்டுக்குள் 59 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளனர்-அமைச்சர் சிவபதி அறிவிப்பு

பள்ளிக்கல்வி துறை சார்பில் சென்னை சாந்தோம் மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தின விழா நேற்று நடந்தது. பள்ளி கல்வி இயக்குனர் தேவராஜன் வரவேற்றார். பள்ளிக்கல்வி துறை செயலர் சபிதா தலைமை தாங்கினார். 

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி அமைச்சர் சிவபதி பேசுகையில், தமிழகம் கல்வியில் சிறந்து விளங்க எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு ஸீ 15 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்குள் 59 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளனர் என்றார்.

தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் 2013 - B.Ed சேர்க்கைக்கு விண்ணப்பம் வரவேற்ப்பு - - நுழைவுத் தேர்வு இல்லை

"கண்ணீரே வராமல் தடுப்பவன் நண்பன்'

பள்ளியில் மாணவன், ஆசிரியர் இருவரும் இரு கண்களைபோல் இருக்க வேண்டும். சிறந்த ஆசிரியரால் மட்டுமே நல்ல மாணவனை உருவாக்க முடியும். அதன் மூலமே அவன் எதிர்காலமும் பிரகாசமாகும். சரியான முறையில் எதிர்பார்த்த கல்வி கிடைக்காததால் தான், நம் நாட்டில் வன்முறை, கலவரம், தீவிரவாதம் உருவாகிறது. குருவை மதிக்கத்தெரிந்தவன்
மட்டுமே புகழ் பெறுவான். கற்க வேண்டிய பருவத்தில் நன்முறையில் முழு மனதுடன் கற்றால் மட்டுமே அது களவற்ற கல்வி.அன்றைய மாணவர்களுக்கும், இன்றைய
மாணவர்களுக்கும் வேறுபாடுகள் ஆயிரம்; இன்றைய மாணவர்கள் கல்வியை மறந்து காதலை பெரியதாக நினைக்கின்றனர். கடமை மறந்து, ஆசிரியர், பெற்றோரை மறந்து, பிறந்த மண்ணை மறந்து பாதை மாறி, விழித்துக் கொண்டே செல்கின்றனர். நல்ல கல்வி கற்ற ஒரு மாணவன் எப்போதும் பாதை மாற மாட்டான்.
தன்னிடம் படித்த மாணவன், நல்ல பதவியுடன் உயர்ந்து நின்று, வாழ்வில் வளம் பெற்றான் என்று கூறுவதை தவிர, ஆசிரியருக்கு வேறு பெருமை கிடைக்காது. அதையே இன்றைய ஆசிரியர்
களும் விரும்புகின்றனர். பிடிப்பான வாழ்க்கை வேண்டாம்; பிடித்த வாழ்க்கையில் சிறப்பாக இருக்க முயற்சியுங்கள்.
எந்தவொரு மாணவனுக்கு நல்ல நண்பன் அமைகிறானோ, அவன் வாழ்க்கை சிறக்கும்; நல்ல ஆசிரியரும் கிடைத்துவிட்டால் வாழ்வு பூத்துக்குலுங்கும். ஆசிரியர்கள், மாணவர்களை உருவாக்கும் சிற்பிகளாக மாறி பணியாற்றுங்கள். கண்ணீரை துடைப்பவன் நண்பன் அல்ல; கண்ணீரே வராமல் தடுப்பவனே நண்பன். நண்பனுக்காக சிறிது நேரம் ஒதுக்குங்கள், என்றார்.
கடந்த 54ம் ஆண்டு முதல் கடந்தாண்டு வரை படித்த 300 மாணவர்கள் குடும்பத்தினருடன் பங்கேற்றனர். கடந்த 1954ல் பள்ளியின் முதல் ஆசிரியராகவும், தலைமை ஆசிரியராகவும் பணியாற்றிய பழனிசாமிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. விழா நிறைவில்,முன்னாள் மாணவர்கள் ஒருவருக்கு ஒருவர் கை குலுக்கி, குடும்ப உறவுகளை அறிமுகப்படுத்தி, கண்ணீருடன் விடை பெற்றனர்.

குடிநீரில் "புளோரைடு' கருவி பொருத்த முடிவு

:திண்டுக்கல், தூத்துக்குடி மாவட்டங்களில் குடிநீரில் அதிக "புளோரைடு' இருப்பதால், அதை நீக்கும் கருவி பொருத்த, அரசு முடிவு செய்துள்ளது.
குடிநீரில் அதிக "புளோரைடு'
இருந்தால், பல், எலும்புகள் பாதித்து வலு இழக்கும். கல்லீரலில் "புளோரின்' படிந்து பாதிப்பு ஏற்படும். இதனால்,
குடிநீரில் "புளோரைடு' அளவை குறைத்து வினியோகிக்க முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனம் மூலம், அதிக "புளோரைடு' பாதிப்புள்ள கிராமங்கள் தேர்வு செய்யப்படவுள்ளன. அளவு மதிப்பீடு செய்யப்பட்டு, அதை நீக்க கருவிகள் அமைக்கப்பட உள்ளன. குடிநீர் வினியாகம் செய்யும் மின் மோட்டார்களில், இக்கருவி பொருத்தப்படும். ஒரு கருவியின் மதிப்பு இரண்டு லட்ச ரூபாய்.

பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கான மூன்று நாள் (Non - Residential) பயிற்சி 26.11.12 முதல் 12.12.12 வரை 2 கட்டங்களாக அந்தந்த குறு வள மைய அளவில் நடைபெறுகிறது

பள்ளிக்கூட பஸ்களை கட்டுப்படுத்தும் புதிய வரைவு விதிகளை நடைமுறைப்படுத்த தடை கோரி பள்ளிகள் சங்கத்தின் சார்பில் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

செப்டம்பர் 3–ந் தேதி தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் முன்னிலையில் ‘தமிழ்நாடு மோட்டார் வாகன (பள்ளிக்கூட வாகன ஒழுங்குமுறை மற்றும் கட்டுப்பாடுகள்) சிறப்பு விதிகள் 2012’ என்ற புதிய விதிகளை அரசு தாக்கல் செய்தது.இந்த விதிகள் அனைத்தும் 30.9.12 தேதியிட்ட அரசிதழில் வெளியிடப்பட்டு, பின்னர் இறுதி அறிவிக்கை வெளியிடப்பட்டு நடைமுறைக்கு வந்துவிட்டன.

8 விதிகள் சாத்தியமில்லை

இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டில் தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மேல்நிலை பள்ளிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் கே.ஆர்.நந்தகுமார் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:–எங்கள் சங்கத்தின் கருத்துகளை கேட்காமலேயே பள்ளிக்கூட பஸ்களை கட்டுப்படுத்தும் அரசாணை வெளியிடப்பட்டது. பள்ளிகள் பஸ் தொடர்பாக கூறப்பட்டுள்ள 21 புதிய விதிகளில் 8 விதிகளை நடைமுறைக்கு கொண்டுவர முடியாது.

வேகத்தடையில் இடிக்கும்

தரையில் இருந்து 250 முதல் 300 மில்லிமீட்டர் உயரத்தில் படி அமைக்கப்பட வேண்டும் என்று விதியில் கூறப்பட்டுள்ளது. ஆனால் கிராமப்புற சாலைகளில் உள்ள வேகத்தடைகளில் பஸ் படிக்கட்டுகள் இடித்து சேதமடையும்.ஓட்டுனருக்கான தனி இரும்புக் கம்பி தடுப்புகளை புதிய விதியின்படி அமைத்தால், ஆபத்து காலங்களில் மாணவர்களை உடனடியாக காப்பாற்ற முடியாமல் போய்விடும்.

அரங்குகள்

மாணவர்கள் தங்கள் பைகளை வைப்பதற்காக சீட்களின் கீழ் அரங்குகள் அமைக்க வேண்டும் என்ற விதியை உடனடியாக அமல்படுத்த முடியாது. மே மாத விடுமுறையில் அதுபோன்ற அரங்குகளை அமைக்க அவகாசம் அளிக்க வேண்டும். அல்லது, புதிதாக வாங்கும் பள்ளிக்கூட பஸ்களுக்கு அந்த விதியை அமல்படுத்தலாம்.வேகக்கட்டுப்பாட்டு கருவிகளை வைப்பதால் அதிக எரிபொருள் செலவும், வீணான செலவும்தான் ஏற்படும். ஏற்கனவே வேகக் கட்டுப்பாட்டுக் கருவியை பயன்படுத்துவது தொடர்பாக ஐகோர்ட்டில் தடையாணை பெறப்பட்டுள்ளது.

அவசர வழி

சான்று பெற்ற நடத்துனரைத்தான் பள்ளிக்கூட பஸ்களில் நியமிக்க வேண்டும் என்று புதிய விதியில் கூறப்பட்டுள்ளது. ஆனால் சான்று பெற்ற நடத்துனர்கள் கிடைப்பதில்லை. எனவே விதியை மாற்றி, நடத்துனருக்குப் பதிலாக உதவியாளர்களை நியமித்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும்.பள்ளிக்கூட பஸ்களிலும், வேன்களிலும் பெரிய அளவில் அவசர வழி அமைக்க வேண்டும் என்று புதிய விதிகளில் கூறப்பட்டுள்ளது. அவ்வளவு பெரிய அவசர வழியை அமைக்க நடைமுறை சாத்தியமில்லை.

ரத்து செய்ய வேண்டும்

3 மாதங்களுக்கு ஒருமுறை, அதாவது ஆண்டுக்கு 4 முறை தகுதிச் சான்றிதழ் (எப்.சி.) பெற வேண்டும் என்ற புதிய விதியை நீக்க வேண்டும். சிறப்பு புலனாய்வுக் குழு, தவறுகளை கண்டுபிடித்து எப்போது வேண்டுமானாலும் அதை ரத்து செய்யலாம் என்ற விதியை நீக்க வேண்டும்.தற்போதுள்ள விதிகள் நடைமுறைக்கு ஒத்துவராது. எனவே இந்த விதிகளை செயல்படுத்த தடை விதித்தும், அவற்றை ரத்து செய்யவும் உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அரசுக்கு நோட்டீஸ்

இந்த மனுவை நீதிபதிகள் சித்ரா வெங்கட்ராமன், ஆர்.கருப்பையா ஆகியோர் விசாரித்தனர். இந்த மனு மீதான விசாரணையை டிசம்பர் 12–ந் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், அன்று அரசு பதிலளிக்கும்படி உத்தரவிட்டனர்.

14/11/12

குழந்தைகள் - நாட்டின் மன்னர்கள் : -இன்று தேசிய குழந்தைகள் தினம் -

*இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு. இவரது பிறந்த தினம் (நவ.,14), தேசிய குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. குழந்தைகள் மீது இவர் அன்பு கொண்டிருந்தார். குழந்தைகளும் அவரை "நேரு மாமா' என அழைத்தனர். இத்தினத்தில், * *பள்ளிகளில் பேச்சுப் போட்டி, கவிதை, ஓவியப் போட்டி, கட்டுரை போட்டிகள் நடத்தப்படுகின்றன. 1889 நவ., 14ல் அலகாபாத்தில் நேரு பிறந்தார். பிரதமராக நேரு இருந்த போது, நாடு முழுவதும் குழந்தைகள், இளைஞர்கள் நலம் அவர்களின் கல்வி, முன்னேற்றம் தொடர்பாக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றினார். ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., எய்ம்ஸ் உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்கள் இவரது ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டன. இ... more »

13/11/12

விபத்தில்லா தீபாவளி: ஆட்சியர் வேண்டுகோள்

*தீபாவளிப் பண்டிகையை விபத்தில்லாமல் கொண்டாட பொதுமக்களுக்கு கடலூர் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திரரத்னூ வேண்டுகோள் விடுத்துள்ளார்.* *÷அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரையில் அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்க உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. ÷பட்டாசு வெடிக்கும்போது * *அதில் உள்ள கந்தக-டை-ஆக்ûஸடு, நைட்ரஜன்-டை-ஆக்ûஸடு, கன உலோக ஆக்ûஸடு மற்றும் மிதக்கும் நுண்துகள்கள் காற்றில் கலந்து சுற்றுச்சூழல் மாசுபடுகிறது.* *÷இதனால் கண் எரிச்சல், சுவாசக் கோளாறு மற்றும் நுரையீரல் நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.* *÷125 டெசிபல் அளவுக்கு மேல் ஒலி எழுப்பும் வெடிகளால் செவிகளுக்கு ச... more »

கணினி மூலம் கல்வி கற்கும் புதிய முறை தொடக்கம்

*சிதம்பரம் ஷெம்போர்டு பள்ளியில் கணினி மூலம் கல்வி கற்கும் டிஜிகிளாஸ் சொல்யூஷன்ஸ் முறை வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.* *÷ரோட்டரி முன்னாள் கவர்னர் ஆர்.கேதார்நாதன் தொடங்கி வைத்தார். * * சர்வதேச அளவில் கல்விச்சேவை செய்து வரும் பியர்சன் நிறுவனம் மூலம் செயல்படும் எடுரைட் டிஜிகிளாஸ் சொல்யூஷன்ஸ் மூலம், கல்வி கற்றல் மற்றும் போதித்தல் பணிகளை* * செவ்வனே செய்ய ஷெம்போர்டு பள்ளி முற்பட்டுள்ளது என பள்ளிக் குழுத் தலைவர் ரோட்டேரியன் ஏ.விஸ்வநாதன் தெரிவித்தார்.* *÷பள்ளி முதல்வர் டி.ராஜமாணிக்கம் டிஜிகிளாஸ் முறை குறித்து விளக்கவுரையாற்றினார். செயலர் வி.ஹரிகிருஷ்ணன் வரவேற்றார். ஆசிரியை யு.அபிதா நிகழ்ச்சி... more »

12/11/12

தேசிய திறனாய்வு தேர்வுக்கு நுழைவுச்சீட்டு விநியோகம்

*தேசிய திறனாய்வு தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெள்ளிக்கிழமை (நவ. 9) முதல் வழங்கப்பட்டு வருகிறது.* *இது குறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்தி: தேசிய திறனாய்வுத் தேர்வு நவம்பர் 18-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அனைத்து மாவட்ட * * தலைநகரங்களிலும் நடைபெற உள்ளது. இதற்கான நுழைவுச் சீட்டு நவம்பர் 9-ம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது. விண்ணப்பித்த அந்தந்த பள்ளிகளிலேயே நுழைவுச் சீட்டை பெற்றுக் கொள்ளலாம் என்று அதில் அறிவிக்கப்பட்டுள்ளது. *

மாணவர்களை காவு வாங்கும் டெங்கு: மதுரையில் பீதி

* மதுரை மாவட்டம் மேலூர், வாடிப்பட்டி பகுதியில் பலி வாங்கும் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சல், தற்போது மதுரை நகரிலும் பரவ துவங்கியுள்ளது. * *மதுரையில், டெங்கு, மர்ம காய்ச்சலின் தீவிரம் அதிகரித்து வருகிறது. கடந்த மே மாதம், குழந்தை பர்ஹானாவும், செப்டம்பரில் ராஜப்ரியாவும், 9, டெங்கு காய்ச்சலுக்கு பலியாயினர்.காய்ச்சலுக்கு பலியானவர்களில் பெரும்பாலானோர் பள்ளி மாணவர்கள். * *இந்நிலையில், நேற்று செல்லூர் மீனாம்பாள்புரத்தில், * *பாண்டித்துரை என்பவரது மகள் தனுஷா, 5, "டெங்கு&' காய்ச்சலுக்கு பலியானார். தனியார் பள்ளியில், ஒன்றாம் வகுப்பு படித்த இவருக்கு, இரு நாட்களுக்கு முன் காய்ச்சல் ஏற்பட்டது. ரத்தப... more »

பள்ளிக்கு அருகாமையில் வசிக்கும் ஆசிரியர்கள் கவனத்திற்கு!!!!!

*உங்கள் பள்ளியில் மாணவர்களுக்கான இலவச லேப்டாப் வைத்திருக்கும் அறைகளை கண்காணிக்க தற்க்காலிக காவலர்களை நியமித்து,நீங்களும் கண்காணிப்பு செய்யலாம்.பள்ளிக்கல்வி இயக்குனர் செயல்முறைகள்.* * **CLICK HERE TO VIEW AND DOWNLOAD DSE PROCEEDINGS FOR LAPTOP PROTECTING** *

நவம்பர் 14. குழந்தைகள் தினம்!

*இந்தியா விடுதலைப்பெற்ற பின் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக பதவி வகித்த ஜவஹர்லால் நேருவின் பிறந்த தினமான நவ.ம்பர் 14 ம் தேதி நம் நாட்டில் தேசிய குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. ஜவஹர்லால் நேரு குழந்தைகள் மீது அதீத அன்பும், பாசமும் கொண்டிருந்தார். அதே போல் * *குழந்தைகளும் நேருவின் மீது பற்று வைத்திருந்தனர். குழந்தைகளால் அவர் நேரு மாமா என செல்லமாக அழைக்கப்பட்டார். * *பண்டிட் ஜவஹர்லால் நேரு 1889ம் ஆண்டு உ.பி.,யிலுள்ள அலகாபாத்தில் பிறந்தார் பிறகு இங்கிலாந்தில் உயர் கல்வியை முடித்துவிட்டு சுதந்திர போராட்டத்தில் மகாத்மா காந்தியுடன் துணை நின்றார் இந்தியா சுதந்திரம் பெற்றதும் சுதந்... more »

10/11/12

ஆசிரியர்களின் குறைகளை தீர்க்க சிறப்பு முகாம்

ஆசிரியர்களின் ஊதியம், தேர்வு நிலை, பதவி உயர்வு உள்ளிட்ட உரிமைகள் மற்றும் சலுகைகளை பெறுவதில் உள்ள சிரமங்களை போக்க, சிறப்பு ஆசிரியர் குறை தீர்க்கும் முகாம் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
பள்ளிக் கல்வித்துறையின் கீழ், பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள், தங்களுக்கு சேர வேண்டிய ஊதிய உயர்வு, தேர்வு நிலை, சிறப்பு நிலை, பதவி உயர்வு மற்றும் இதர உரிமைகள், சலுகைகள் பெறுவதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

எனவே, ஆசிரியர்களின் பண, பணி மற்றும் இதர பலன்கள் உடனுக்குடன் கிடைக்கும் வகையிலும், அனைத்து கல்வி அலுவலகங்களிலும், சிறப்பு குறை தீர்க்கும் முகாம் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று, பள்ளிக் கல்வி இயக்குனர், அரசிற்கு கடிதம் எழுதினார்.இதை, தமிழக அரசு, சிறப்பு ஆசிரியர் குறை தீர்க்கும் முகாம் திட்டத்தை அறிமுகப்படுத்த முடிவெடுத்து, இதற்கான அரசாணையையும் வெளியிட்டுள்ளது. இதற்கான, நடைமுறைகளையும் வெளியிட்டுள்ளது.

இதன்படி, ஒவ்வொரு மாதமும், முதல் சனிக்கிழமையில், தொடக்க கல்வித்துறை சார்ந்த ஆசிரியர்களுக்கு, உதவி தொடக்க கல்வி அலுவலகத்திலும்; அனைத்து உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு, மாவட்ட கல்வி அலுவலகங்களிலும் சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நடக்கும். இதில் பெறப்படும் மனுக்களை, பரிசீலித்து உடன் நடவடிக்கை எடுத்து உரிய உத்தரவு வழங்கப்பட வேண்டும்.

இரண்டாம் சனிக்கிழமைகளில் மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் நடக்கும் சிறப்பு முகாமில், தொடக்க கல்வி, மாவட்ட கல்வி அலுவலரிடம் இருந்து பெறப்படும் மனுக்களை பரிசீலித்து, உரிய நடவடிக்கை எடுத்து உத்தரவு வழங்கப்பட வேண்டும்.

மூன்றாம் சனிக்கிழமைகளில், தொடக்க பள்ளி கல்வி இயக்ககங்களில் நடக்கும் சிறப்பு குறை தீர்க்கும் முகாமில், மாவட்ட தொடக்க கல்வி மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது. முகாமில், சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் வரமுடியாவிட்டால், அவரின் நெருங்கிய உறவினர்கள் பங்கேற்கலாம்.

9/11/12

குழந்தைகள் தினம் கொண்டாடுதல் - செலவினத் தொகை தொடர்பான அரசாணை

தீபாவளி - தீ பாதுகாப்பு உறுதிமொழி: பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் சென்னை-6

ந.க.எண். 76563/எம்/இ1/2012, நாள்.07.11.2012.


பொருள்:- பள்ளிக் கல்வி-தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை-தீபாவளி 2012- தீபாவளி பண்டிகையின்போது – தீ பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தல் – தீ பாதுகாப்பு குறித்து பிரச்சாரம் உறுதிமொழி எடுத்தல்-சார்ந்து.

பார்வை:- சென்னை-8, காவல்துறை தலைமை இயக்குநர், தீயணைப்பு-மீட்புப் பணித்துறை, அவர்களின் ந.க.எண். 19650/இ1/2012, நாள்.25.10.2012. மற்றும் 01.11.2012.

பார்வையில் காணும் கடிதத்திற்கிணங்க பள்ளி மாணவர்களிடையே தீபாவளி பண்டிகை கொண்டாடுதல் சார்ந்து உரிய விழிப்புணர்வு உண்டாக்குதல் பொருட்டு அறிவுரைகள் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக கீழ்குறிப்பிட்ட உறுதி மொழிகளை ஒவ்வொரு பள்ளி மாணவ மாணவிகளும் காலை இறைவணக்கத்தின்போதே உறுதிமொழி ஏற்கும் வகையில் அனைத்து தலைமை ஆசிரியர்களும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுரை வழங்கி ஆணையிட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.

ஒம்/-. கு. தேவராஜன்,
பள்ளிக் கல்வி இயக்குநர்.

பெறுநர்
அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள்.

இணைப்பு
தீபாவளி பண்டிகைக்கான உறுதிமொழி விவரம்.

தீபாவளி பண்டிகைக்கான உறுதிமொழி

1. பட்டாசுகளை கவனமாகவும் விபத்தில்லாமலும் வெடிப்போம்.

2. பெரியவர்கள் உடனிருக்க பட்டாசுகளை வெடிப்போம்.

3. பட்டாசு வெடிப்பதற்கு முன்பாக பாத்திரங்களில் தண்ணீர், மணல், ஆகியவற்றை தயாராக வைத்துக் கொள்வோம்.

4. திறந்த வெளிகள் மற்றும் பொது இடங்களில் கூட்டாக பட்டாசுகளை வெடிப்போம்.

5. இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பட்டாசுகளை வெடிக்க மாட்டோம்.

6. அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்போம்.

7. மருத்துவ மனைகள், பள்ளிகள் முதலானவை அமைந்துள்ள அமைதிப் பகுதிகளில் பட்டாசுகளை வெடிக்க மாட்டோம்.

8. குடிசைகள் எளிதில் தீ மற்றும் பொருட்கள் இருக்கும் இடங்களில் பட்டாசுகளை வெடிக்க மாட்டோம்.

9. ஒலியினைக் குறைப்போம் ! செவியினைக் காப்போம்!

10. கொண்டாடுவோம்! கொண்டாடுவோம்! விபத்தில்லா தீபாவளியைக் கொண்டாடுவோம்.
.

www.dse.tn.gov.in | தமிழக பள்ளிக்கல்வி இயக்ககத்தின் புதிய இணையதளம் www.dse.tn.gov.in இதில் பள்ளிக்கல்வி இயக்ககத்தின் செய்திகள், அரசாணைகள், அனைத்து பணியாளர்களின் பணிமூப்பு பட்டியல் போன்ற விவரங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறதுwww.dse.tn.gov.in | தமிழக பள்ளிக்கல்வி இயக்ககத்தின் புதிய இணையதளம் www.dse.tn.gov.in இதில் பள்ளிக்கல்வி இயக்ககத்தின் செய்திகள், அரசாணைகள், அனைத்து பணியாளர்களின் பணிமூப்பு பட்டியல் போன்ற விவரங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது

"கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டவில்லையே'

தீபாவளி அட்வான்ஸ் ரூ. 5 ஆயிரமாக உயர்த்தி அறிவித்தும், "கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டாததாக' உள்ளது என ஊழியர்கள் புலம்புகின்றனர்.தீபாவளி அட்வான்ஸ் ரூ.2 ஆயிரத்தை உயர்த்தி தர ஆசிரியர், அரசு ஊழியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்தன. அரசும் ரூ. 5 ஆயிரமாக உயர்த்தி அறிவித்தது. இதற்கான
உத்தரவு(எண்- 388, நாள்: 6.11.2012) 2 நாட்களுக்கு முன் வெளியானது. இதில் நவ., 6ம் தேதிக்கு பின்பு அட்வான்ஸ் பெறுவோருக்கே ரூ. 5 ஆயிரம் வழங்கலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.பொதுவாக பண்டிகைக்கு, ஒரு மாதத்திற்கு முன் அட்வான்ஸ் தொகை வழங்கப்படும். தீபாவளிக்காக 75 சதவீத ஊழியர்கள், ஆசிரியர்கள் ஏற்கனவே உள்ள பழைய அட்வான்ஸ் ரூ. 2 ஆயிரத்தை பெற்றனர். முதல்வரின் அறிவிப்புக்கு மாறாக, நவ.,6ல் அரசாணை வெளியாகி, அதற்குபின்னர் கேட்பவர்களுக்கே ரூ. 5 ஆயிரம் என்று கூறியதால், பலர் கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டாத நிலையில் உள்ளனர். அட்வான்ஸ் வாங்கிய தொகையை இன்னும் பிடித்தம் செய்ய துவங்காததால், தங்களுக்கும் இந்த அரசாணை பயன்படும் வகையில், உத்தரவு பிறப்பித்தால் நல்லது என, ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர்.

தலைமையாசிரியர் பதவி:இடைநிலை ஆசிரியர்கள் கோரிக்கை

உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வில், இடைநிலை ஆசிரியர்கள் பாதிப்பதால், அவர்களுக்கும் பதவி உயர்வு வழங்க பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

பதவி உயர்வு மூலம் பட்டதாரி ஆசிரியர்களாகும், இடைநிலை ஆசிரியர்கள், பணிமூப்பு அடிப்படையில், உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் ஆகின்றனர். இதில், நேரடி பட்டதாரி ஆசிரியருக்கும், இடைநிலை ஆசிரியராக இருந்து, பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற்றவர்களுக்கும் சமநிலை உள்ளது.
தற்போது, அனைவருக்கும் கல்வி இயக்க ஆசிரியர் பயிற்றுனர்களாக, பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்கள் 2002 முதல் பள்ளி ஆசிரியர்களாக பணி நியமனம் செய்யப்பட்டனர். உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வின் போது, ஆசிரியர் பயிற்றுனர்களாக இருந்து, பட்டதாரி ஆசிரியர்களாக வந்தவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படுகிறது.
இதனால் இடைநிலை ஆசிரியர்கள் பாதிக்கின்றனர்.இதன் மீது, பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்து, ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு 50 , இடைநிலை ஆசிரியர்களுக்கு 50 சதவீதம் என, ஒதுக்கீடு வழங்க வேண்டும் என இடைநிலை ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.